India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டம் சோலார் அருகில் காவிரி ஆற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவிரி ஆற்றில் மூழ்கிய சின்னம்பாளையத்தை சேர்ந்த சிறுவர்கள் தபீஸ், மெளனீஸ் ஆகியோரது உடல்களை மொடக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தனர்.
அந்தியூர் தேவர் மலைப்பகுதியை சேர்ந்தவர் சாக்சி (35). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று பிரசவவலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவருக்கு அதிக வலி ஏற்பட்டது. பின்னர், நடுக்கத்தில் நிறுத்தப்பட்டு 108 ஆம்புலன்ஸில் பிரசவம் பார்க்கப்பட்டது. அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பர்கூர் ஆரம்ப சுகாதர நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் பவானி நகர் மன்ற தலைவர் சிந்துரி இளங்கோ தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இன்று நம்மை சுற்றி வாழும் சின்னஞ்சிறிய பறவைகளையும் காப்பாற்றுவோம். அவைகளின் தாகம் தீர்க்க வீட்டின் மொட்டை மாடிகளில் தண்ணீர் வைப்போம். என்று பவானி பூங்கா மற்றும் பவானியில் பறவைகள் நிறைந்த பகுதிகளில் குடிநீர் மற்றும் அவர்களுக்கு தேவையான உணவுகளையும் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் பூங்கா காலனியை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய வீட்டில் நேற்று மாலை கேஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றியது. பின்னர் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் குடிசை வீடு தீப்பற்றியது. உடனடியாக தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடிசை எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் நேற்று (ஏப்.20) 108.68 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் ஈரோடு மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.
ஈரோடு தொகுதியில் பதிவான வாக்குபதிவு இயந்திரங்கள் சித்தோடு அரசு பெறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிசிடிவி காட்சிகள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. குமாரப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கான அறையின் சிசிடிவி டிஜிட்டல் திரையில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக சரிசெய்யப்பட்டதாகவும், கட்சிகள் அனைத்தும் பதிவாகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரித்தனர்.
ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், மே 8ஆம் தேதி முதல் மே.22 ஆம் தேதி வரை பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரித்தல் தொடர்பான இலவச பயிற்சி நடைபெறவுள்ளது. இதில் பயிற்சி, சீருடை, உணவு இலவசமாக வழங்கப்படும். எனவே விருப்பம் உள்ள நபர்கள் 0424-2400338, 8778323213 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தியூர் வார சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. அவற்றில் ராசி வெற்றிலை ஒன்று இரண்டு ரூபாய்க்கும் பீடா வெற்றிலை ஒன்று 80 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டன. கோடை காலம் என்பதால் வெற்றிலை உற்பத்தி குறைந்ததால் வெற்றிலை விலை கடந்த வாரத்தை விட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
அந்தியூர் அருகே வரட்டு பள்ளம் சோதனை சாவடி அருகே கர்நாடகா மாநிலம் ராமாபுரம் சாம்ராஜ் நகர் பகுதியில் இருந்து சோயா பீன்ஸ் ஏற்றி வந்த லாரி இன்று மதியம் எதிர்பாராத விதமாக 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பர்கூர் போலீசார் படுகாயமடைந்த லாரி டிரைவர் அபிமன்னனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக வெயில் கடந்த வாரத்தில் 109.4 டிகிரி கொளுத்தியது. இதனால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்களில் சென்று வரும் வாகன ஓட்டிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. இந்நிலையில், அம்மாபேட்டையில் இருந்து ஊமாரெட்டியூர் வழியாக குருவரெட்டியூர் செல்லும் சாலை இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
Sorry, no posts matched your criteria.