India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில் வரத்து குறைந்துள்ளதால் முருங்கைக்காயின் விலை கிலோ ரூ 120க்கு விற்பனையானது. ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. நேற்று ஈரோட்டில் முருங்கைக்காயின் விலை கிலோ 120-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் சற்றே கலக்கமடைந்துள்ளனர். இது குறித்து வியாபாரி ஒருவர் தெரிவித்தபோது, பனிப்பொழிவால் விளைச்சல் குறைவு எனவும், மேலும் காய்கறிகளின் விலை உயரக்கூடும் எனவும் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC GROUP 2/2A முதன்மை தேர்வுக்கான தேர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. எனவே பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் 94990-55943,0424-2275860 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம்.
சென்னிமலை சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது சென்னிமலை அடுத்த முருகன் கோவில் பாறை என்ற இடத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பது தெரிய வந்தது. போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். கார்த்தி, அருணாச்சலம், சந்தோஷ் குமார், பரமசிவம் குருசாமி ஆகியோர் பணம் வைத்து சூதாடிய 7 பேரை கைது செய்தனர்.
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னிமலை வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர தலைவர் S.செந்தில், M. சாதிக் பாட்ஷா மாவட்ட துணை தலைவர், வேலுசாமி மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி ப பங்கேற்றனர்.
பெருந்துறையில் அமைந்துள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 40 கோடி செலவில் புதிதாக அமைய உள்ள தீவிர சிகிச்சை பிரிவு கட்டட பணியை விரைந்து முடிக்குமாறு பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். சந்திப்பின்போது மாவட்ட பொருளாளர் மணி பங்கேற்றார்.
ஈரோடு மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதுவரை சாராயம் காய்ச்சி விற்றதாக 5 பேர், கஞ்சாவிற்ற 9 பேர், வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட 10 பேர், தொடர் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பேர், மசாஜ் சென்டர்களில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக 9 பேர் என கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி ஜவகர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நவ.16, 17 ஆகிய இரண்டு நாட்களாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம் நடைபெற்றது, இதில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்க்க 8,541 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 2,221 வாக்குச்சாவடி முகாம்கள் நடைபெற்றன. மொத்தம் 17,423 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவ்வாறு ஈரோடு தேர்தல் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நேற்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஜவுளி சந்தை களையிழந்து காணப்பட்டது. பொதுவாக, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாக கொள்முதல் செய்வார்கள். அந்த வகையில் அவர்கள் வராததால் வியாபாரம் மந்தமாகவே காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பவானிசாகர் அணை நீர் தேக்கப்பகுதி அருகே கோவை மாவட்டம், கணேஷபுரம், பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (42), தனது அக்கா நித்யாவிற்கு வாட்ஸ் அப் மூலம் தற்கொலை செய்யப் போவதாக மெசேஜ் அனுப்பி விட்டு , லொகேஷனையும் ஷேர் செய்துள்ளார். பின் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துள்ளார். சரியான வேலை இல்லை, திருமணமாகாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடம்பூர் மலை கிராமம், அணைக்கரை, பைரமர தொட்டியை சேர்ந்தவர் மாறன், வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது. அதில் சோளம் விதைத்துள்ளார். இரவு சோளக்காட்டில் காவலுக்கு சென்ற போது மறைந்திருந்த காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து கடம்பூர் எஸ்ஐ பிரபாகரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
Sorry, no posts matched your criteria.