Erode

News November 21, 2024

ஈரோடு மாவட்டத்தில் 19.64 இலட்சம் வாக்காளர்கள்

image

ஈரோடு மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி 19 லட்சத்து 64,676 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 9 லட்சத்து 50,706 ஆண்கள், 11 லட்சத்து 1,378 பெண்கள், 3ம் பாலினத்தவர் 181 பேர் உள்ளனர். மேலும், 30 வயதுக்கு கீழ் இளம் வாக்காளர்கள் 3 லட்சத்து 22,466 பேர் உள்ளனர். மேலும், வரும் 23, 24 தேதியில் வாக்காளர் முகாம் நடக்க உள்ளது என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

News November 21, 2024

ஈரோடு புறநகர் பகுதியில் மின்தடை

image

ஈரோடு அடுத்த கங்காபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. மின்தடை பகுதிகள்: கங்காபுரம், குமிளம்பரப்பு, டெக்ஸ்வேலி, கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, சூரிப்பாறை, கொளத்துப்பாளையம், கரட்டுப்பாளையம், சடையம்பாளையம், கவுண்டன்பாளையம், தயிர்பாளையம், ஆலுச்சாம்பாளையம் மற்றும் பள்ளிபாளையம்.

News November 21, 2024

மருத்துவ முகாமை பார்வையிட்ட அமைச்சர்கள்

image

தாளவாடியில், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணியின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு பழங்குடி மக்களுக்கு மாபெரும் பொது மருத்துவ முகாம் (ஆசனூர் மைராடா வளாகம்) அரேபாளையத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமினை பார்வையிட்டனர். உடன் அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் பங்கேற்றனர்.

News November 21, 2024

உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டம்: கலெக்டர் ஆய்வு

image

ஈரோட்டில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், ஆனந்தம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் அங்கன்வாடி மையத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகளுக்கான தடுப்பூசி, சமையல் கூடம், சமையல் பொருட்களின் இருப்பு, குழந்தைகளின் எடை, உயரம் பரிசோதனை ஆகியவற்றை பார்வையிட்டார்.

News November 21, 2024

ஈரோடு: குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

image

ஈரோட்டில் மாநகராட்சி, சமூக நலத்துறை சார்பில் குழந்தைகள் திருமண தடுப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், குழந்தை திருமணம் சட்டம் குறித்தும், குழந்தை திருமணத்தினால் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமில், மாநகராட்சியின் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட ஆண், பெண் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

News November 21, 2024

இலங்கை தமிழர் முகாமில் ஆட்சியர் உத்தரவு

image

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் மொடக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஈஞ்சம்பள்ளி ஊராட்சியில் செயல்பட்டு வரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், முகாம் வாழ் மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

News November 21, 2024

ஈரோடு மாணவர்கள் மாநில அளவில் சாதனை

image

சென்னையில் அண்ணா தொழில் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான புத்துளிர் கண்காட்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஈரோடு கொங்கு நேஷனல் பள்ளி மாணவர்கள் அப்சல் அலி, ருத்ர மூர்த்தி, அப்துல் காதர் மாநில அளவில் இரண்டாம் பரிசை பெற்றனர். அவர்களுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசு வழங்கினார்.

News November 21, 2024

சென்னிமலையில் கைத்தறி தொழில் முடக்கம்

image

சென்னிமலையில் 36 கைத்தறி கூட்டுறவுச் சங்கங்கள் செயல்படுகின்றன. 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உறுப்பினராக இருந்து கைத்தறி நெசவு தொழில் செய்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக கைத்தறியின் அனைத்து உபகரணங்களும் மரத்தால் செய்யப்பட்டுள்ளதால் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அவற்றை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது என கைத்தறி நெசவாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

News November 20, 2024

ஈரோடு தலைப்புச் செய்திகள்

image

1.அந்தியூரில் போதை மாத்திரையை சிரஞ்சு மூலம் ஏற்றிய ஐவர் கைது
2.ஈரோடு வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22தேதிக்கு ஒத்திவைப்பு
3.சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
4.சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்கு
5.அதிமுகவில் இணைந்த முன்னாள் திமுக கவுன்சிலர்

News November 20, 2024

போதை மாத்திரையை சிரஞ்சு மூலம் ஏற்றிய ஐவர் கைது

image

அந்தியூர்வெள்ளப்பிள்ளையார் கோயில் அருகே இன்று 5 பேர் கொண்ட கும்பல் போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து சிரஞ்சு மூலம் ஏத்தியதாக ரோந்து பணியில் இருந்த எஸ்.ஐக்கு செபஸ்தீயான் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை கைது செய்து அந்தியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார்.

error: Content is protected !!