Erode

News May 7, 2024

அரசு மருத்துவமனையில் தொடர் மின்வெட்டு… கடும் அவதி

image

அந்தியூர் அரசு மருத்துவமனையில் காலை முதல் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கர்ப்பிணிகள், குழந்தைகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு எலக்ட்ரீசியன் வரவழைக்கப்பட்டு பழுது சரி செய்யப்பட்டது. வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடை ஏற்பட்டது.

News May 7, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

ஈரோடு மக்களவை தொகுதியில் நடந்து முடிந்த தேர்தலில் பதிவான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சித்தோடு அடுத்த ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த மையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா இன்று வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

News May 7, 2024

ஈரோடு: 810 கிலோ தங்கம்… ரூ.666 கோடி

image

கோவை கொடிசியாவில் இருந்து ரூ. 666 கோடி மதிப்பிலான 810 கிலோ தங்க நகைகளை கொண்டு சென்ற சரக்கு வாகனம் நேற்று இரவு சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. சமத்துவபுரம் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது, வாகனத்துக்கு முன்னால் சென்ற லாரியின் மேல் மூடப்பட்டிருந்த தார்பாய் கழன்று காற்றில் பறந்து வந்து சரக்கு வாகனத்தின் முன்பகுதியில் விழுந்ததால் நிலை தடுமாறிய வாகனம் கவிழ்ந்தது.

News May 7, 2024

நீங்களும் இனி ரிப்போர்ட்டர் தான்

image

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல் நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News May 7, 2024

சத்தி: சொகுசு பேருந்து கவிழ்ந்து 17 பேர் படுகாயம்

image

ஈரோடு, சத்தியமங்கலம் அத்தானி ரோட்டில் அத்தப்பகவுண்டன்புதூர் பிரிவில் ஊட்டியில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றி சென்ற தனியார் சுற்றுலா பேருந்து மழை காரணமாக சாலையோரமாக நின்றிருந்த ரோடு போடும் இயந்திரம் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்து சத்தியமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 7, 2024

ஈரோடு மாவட்டத்திற்கு எச்சரிக்கை

image

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

உங்களுடன் உங்கள் எம்.எல்.ஏ நிகழ்வு

image

மொடக்குறிச்சி அடுத்த துய்யம்பூந்துறை ஊராட்சியில் உள்ள மாதேஸ்வரன் நகர் பகுதியில், நான் உங்களுடன் உங்கள் எம்.எல்.ஏ எனும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களை, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ சரஸ்வதி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின் பொது மக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்றார்.

News May 6, 2024

ஈரோட்டில் மதிய வேலை ரத்து

image

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் அக்னி வெயிலின் தாக்கம் காரணமாக வெப்ப காற்று வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டு காலை 6 முதல் 11 வரையும், மாலை 4 முதல் 9 வரையும் பணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News May 6, 2024

ஈரோடு: விஏஓ அலுவலகங்களில் ஆட்சியர் ஆய்வு

image

கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கொடுமுடி வட்டத்திற்குட்பட்ட இச்சிப்பாளையம் , வெங்களூர் ஆகிய கிராம நிர்வாக அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பட்டாமாறுதல், பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல், நில அளவை போன்ற பதிவேடுகளை பராமரிக்கவும், உரிய நேரத்தில், சரியான முறையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.

News May 6, 2024

பெருமுகை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் 

image

கோபிசெட்டிப்பாளையம் அடுத்த பெருமுகை சேட்டுக்காட்டுப்புதூரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால் தடயங்களை வைத்து சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். தற்போது சென்ஸார் ட்ரோன் மூலம் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சுற்று வட்டார பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.