Erode

News November 25, 2024

தாட்கோ (TAHDCO) மூலம் போட்டி தேர்வுக்கு பயிற்சி

image

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு (CA)சி.ஏ., (CS)சி.எஸ்., (CMA) சி.எம்.ஏ., போன்ற போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 0424-2259453 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News November 25, 2024

ஈரோடு: நூலகத்தை திறந்து வைத்த அமைச்சர்!

image

ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி, சீதாலட்சுமிபுரத்தில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கலைஞர் நூலகத்தை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று திறந்து வைத்தார். இதில் திமுக மாவட்ட செயலாளர், நல்லசிவம், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

News November 25, 2024

ஈரோடு அருகே மின்தடை அறிவிப்பு

image

பவானி அடுத்த கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (நவ.26) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், பெருமாபாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, குஞ்சரமடை, பெருந்தலையூர், கருக்கம்பாளையம், அய்யம்பாளையம், வெள்ளாங்கோவில், தங்கமேடு, ஆப்பக்கூடல் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News November 25, 2024

ஈரோடு அருகே எகிறிய பூ விலை

image

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ 1,400 ரூபாய்க்கு ஏலம்போனது. இதேபோல் முல்லை-785 ரூபாய்க்கும், காக்கடா-625, செண்டு-மல்லி-37க்கும், கோழிகொண்டை-120க்கும், ஜாதிமுல்லை-750, கனகாம்பரம்-1,360 க்கும், சம்பங்கி-80க்கும், அரளி-220 க்கும், துளசி-40க்கும், செவ்வந்தி-200 ரூபாய்க்கும் விற்பனையானது.

News November 25, 2024

பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஈரோடு வருகை 

image

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (நவ.25) ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு கோபி – ஸ்ரீ கார்த்திகேயன் மஹாலில் தமிழ் மாணவர் மன்றம் துவக்க விழா, பின் மொடச்சூர், சீதாலட்சுமிபுரம் – கலைஞர் நூலகம் திறப்பு விழா மற்றும் பெரியபுலியூர் – கலைஞர் நூலகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார் என திமுகவினர் தெரிவித்துள்ளனர்.

News November 24, 2024

ஈரோடு: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ வரட்டு பள்ளம் அணையில் எம்எல்ஏ பார்வை ➤ ஈரோட்டில் ரூ.1.20 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் ➤ நடமாடும் நியாய விலைக் கடை துவக்கம் ➤ பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை ➤ வெள்ளோட்டில் கோ-கோ போட்டி ➤ ஆசனூர் அருகே சாலையில் விழுந்த மூங்கில் மரம் ➤ திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ➤ கஞ்சா விற்பனை செய்த நபர் மீது வழக்கு பதிவு ➤ ரூ.1.42 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

News November 24, 2024

ஈரோடு: பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை 

image

ஈரோட்டை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் போது, வெண்டியபாளையத்தை சேர்ந்த தினேஷ் (23) என்பவர்  அறிமுகமாகியுள்ளார். 2 மாதங்களாக இவர்கள் இன்ஸ்டாகிராமில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் தினேஷ் ஈரோடு வெண்டிபாளையம் வருமாறு அழைத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த்துள்ளனர். 

News November 24, 2024

ஈரோடு அருகே விபத்து

image

கோபி அருகே அக்கரைகொடிவேரி பகுதியில், நேற்று மாலை சத்தியமங்கலம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக சாலை நடுவே உள்ள தடுப்பு கற்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரில் பயணித்த 3 பேர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 24, 2024

பர்கூர்: ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பில் பணிகள் 

image

ஈரோடு மாவட்டம் பர்கூர் கொள்ளேகால் சாலையில், 150 மீட்டர் நீளத்திற்கு ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது (மழைக்காலங்களில் ஏற்படும் சேதங்களைத் தடுக்கும் பொருட்டு). பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

News November 24, 2024

வரட்டு பள்ளம் அணையில் எம்எல்ஏ பார்வை

image

அந்தியூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள வரட்டு பள்ளம் அணை, கடந்த சில நாட்களாக மழைப்பொழிவின் காரணமாக முழு கொள்ளளவை 33.46 அடி எட்டியுள்ளது. இந்த அணையினை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாஜலம், மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் காசி, விவசாயிகள் பார்வையிட்டனர்.

error: Content is protected !!