India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நம்பியூர் அடுத்த மலையபாளையம் புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி, கருப்புசாமி ஆகியோர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு பறந்து வந்த மலைத் தேனீக்கள் திடீரென இருவரையும் கொட்டியது. இதில் வலி தாங்க முடியாமல் 2 பேரும் சத்தமிட்டுள்ளனர். எனவே அங்கு வந்த மற்ற 4 பேரையும் தேனி கொட்டியது. இந்நிலையில் 6 பேரும் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திற்குள் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைத் தவிர்க்க இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசார், ஈரோடு பேருந்து நிலையத்தில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 90 வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். இதுபோல் நேற்று முன்தினம் 80 வாகனங்களுக்கும் அபராதம் விதித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் 182 டாஸ்மாக் மதுக்கடைகளில் கடந்த 30ம் தேதி ரூ.9 கோடியே 79 லட்சத்து 61 ஆயிரத்து 935க்கு விற்பனை செய்யப்பட்டன. 31ம் தேதி ரூ.9 கோடியே 82 லட்சத்து 6 ஆயிரத்து 495க்கும், 1ம் தேதி ரூ.7 கோடியே 9 லட்சத்து 81 ஆயிரத்து 265க்கும் மது, பீர் வகைகள் விற்றன. தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்களில் ரூ.26 கோடியே 71 லட்சத்து 49 ஆயிரத்து 695க்கு மது விற்பனை செய்யப்பட்டன.
ஈரோட்டில் நித்ய என்ற பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்து 50 நாட்களேயானா பெண் குழந்தையை, நாகர்கோவிலை சேர்ந்த ஒரு தம்பதிக்கு, ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக தற்போது புரோக்கர்கள் பானு, ராதாமணி, ரேவதி, செல்வி உட்பட 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தீபாவளி விடுமுறை முடிந்து ஏராளமானோர் மீண்டும் பணி செய்யும் ஊருக்கு செல்கின்றனர். இந்நிலையில், வெளியூர் சென்று திரும்பும் நபர்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களான பேருந்து நிலையங்கள் மற்றும் இரயில் நிலையங்களில் ஏறும் போதும், இறங்கும் போதும் செல்போன்கள், விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பில் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈரோடு, கொல்லம்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், துரித உணவு (பாஸ்ட் புட்) தயாரிப்பு இலவச பயிற்சி வகுப்பு வரும் நவம்பர் 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவா்கள் 0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி அன்று (31.10.2024) ஈரோடு வளையக்கார வீதி மற்றும் மாணிக்கம்பாளையம் போன்ற நகரில் தென்னங்கீற்று கொண்டு வேயப்பட்டிருந்த கொட்டகைகள் தீப்பிடித்தன. இதுபோல் அவல்பூந்துறை, சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை என மாவட்டத்தின் பிற பகுதிகள் என 5 இடங்களில் பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டதாக ஈரோடு தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,300 கன அடியாக உள்ளது. நீர் மட்டம் 91.57 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 22.62 டி.எம்.சி., அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,700 கன அடி ஆகும்.
சித்தோடு காவல் நிலைய ஆய்வாளர் ரவி மற்றும் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கூட்டமாக இருந்தது, அதே பகுதியை சேர்ந்த கோபால் (25), வினோத்குமார் (36) மது போதையில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீஸ்சார் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஆய்வாளர்கள் பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இருவரையும் அவர்கள் கைது செய்தனர்.
ஈரோடு அடுத்த திண்டலில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வேலாயுத சுவாமி (முருகன்) திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில், கந்த சஷ்டி விழா இன்று (நவ.2) காலை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து 8ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. மேலும் இக்கோவிலில் ராஜ கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.