Erode

News November 5, 2024

மாபெரும் விவசாய கண்காட்சி

image

ஈரோடு மாவட்டம், பெருந்துறை – சக்தி திருமண மண்டபத்தில் (பேருந்து நிலையம் பின்புறம்) மாபெரும் விவசாய கண்காட்சி 2024, நவம்பர் 22, 23, 34 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் விவசாய பொருட்கள், உணவு பொருட்கள், மாடித் தோட்ட விதைகள், தானியங்கள், பால் பண்ணை பொருட்கள், இயற்கை உரங்கள், இடுபொருட்கள், விவசாய எந்திரங்கள், கால்நடை வளர்ப்பு போன்றவை இடம்பெற உள்ளது.

News November 5, 2024

பெருந்துறையில் மஞ்சள் ஏலம்

image

பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் ஏலம் இன்று (5ஆம் தேதி) நடைபெற்றது. இதற்கு 64 மஞ்சள் மூட்டைகள் கொண்டு வரப்பட்டதில் 46 மூட்டைகள் ஏலம் போனது. இதில் விரலி மஞ்சள் குவிண்டால் (100 கிலோ) ஒன்று ரூ.8 ஆயிரத்து 889 முதல் ரூ.13 ஆயிரத்து 19 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.8 ஆயிரத்து 139 முதல் ரூ.11 ஆயிரத்து 869 வரைக்கும் விற்பனை ஆனது.

News November 5, 2024

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவிய தவெகவினர்

image

சென்னிமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக சிரமத்தில் இருந்து வந்தார். இவரது நிலைமையை அறிந்த சென்னிமலை நகர தலைமை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றனர். அந்த பெண்ணிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். மேலும் அந்த பெண் சிறு தொழில் செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்வதாக தெரிவித்தனர். கட்சியின் சென்னிமலை நகர தலைமை தலைவர் உடனிருந்தார்.

News November 5, 2024

ஈரோட்டில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

image

தமிழ்நாடு பள்ளி கல்வி துறை சார்பில் ஈரோட்டில் நாளை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஈரோடு வஉசி திடலில் நடைபெறுகின்றன. இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 7000 மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து விளையாட்டு அலுவலர் சாலமன் மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வசதியும், மருத்துவ வசதியும், தங்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

ஈரோடு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை

image

ஈரோடு மாநகராட்சி எஸ்கேசி ரோட்டில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவி ஆர்.நேத்ரா ஸ்ரீ மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் நான்கு பிரிவுகளில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இதற்கான பாராட்டு விழா நேற்று பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை சுமதி பதக்கங்களை வழங்கி மாணவியை பாராட்டினார். சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

News November 5, 2024

கொடிவேரி அணைக்கு செல்ல இன்று ஒரு நாள் தடை

image

ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணையில் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணை இன்று (5.11.2024) சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல் கடந்த இரு நாட்களுக்கு முன் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 4, 2024

ஈரோட்டில் இன்றயை தலைப்பு செய்திகள்

image

➤ஈரோட்டில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று நடைபெற்றது. ➤கொடிவேரி அணையில் இன்று நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ➤நம்பியூர் அருகே தேனீ கொட்டியதில் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ➤ஈரோட்டைச் சேர்ந்தவர்களுக்கு வரும் 8ஆம் தேதி ராணுவ சேர்க்கை முகாம் கோவையில் நடைபெறவுள்ளது. ஈரோட்டில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது.

News November 4, 2024

ஈரோடு திருவிழாவில் ஜெர்மன் நாட்டு சகோதரர்கள்

image

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் உள்ள பீரேஸ்வரர் கோயில் சாணி அடி திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு ஜெர்மன் நாட்டு சகோதரர்கள் தொடர்ந்து மூன்றாண்டுகளாக கலந்து கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டும் அவர்கள் திருவிழாவிற்காக மூன்று நாட்கள் முன்பாகவே வந்து இங்கு தங்கி நேற்று சாணி அடி திருவிழாவை பார்த்து ரசித்தனர். இவர்களோடு சேர்ந்து மேலும் ஆறு பேர் இந்த ஆண்டு விழாவில் பங்கேற்றனர்.

News November 4, 2024

ஈரோடு மக்கள் குறைதீர் நாள் முகாம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (நவம்பர் 4) நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத் திட்டம், முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை (ம) காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.

News November 4, 2024

ஈரோடு இளைஞர்களே.. ராணுவத்தில் சேர அரிய வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்ட இளைஞர்களுக்கு தேர்வு முகாம் நடைபெறும் நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு வரும் 8ஆம் தேதி தேர்வு முகாம் நடைபெற உள்ளதால் ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.