India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில் நவ.16, 17 ஆகிய இரண்டு நாட்களாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம் நடைபெற்றது, இதில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்க்க 8,541 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 2,221 வாக்குச்சாவடி முகாம்கள் நடைபெற்றன. மொத்தம் 17,423 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவ்வாறு ஈரோடு தேர்தல் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நேற்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஜவுளி சந்தை களையிழந்து காணப்பட்டது. பொதுவாக, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாக கொள்முதல் செய்வார்கள். அந்த வகையில் அவர்கள் வராததால் வியாபாரம் மந்தமாகவே காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பவானிசாகர் அணை நீர் தேக்கப்பகுதி அருகே கோவை மாவட்டம், கணேஷபுரம், பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (42), தனது அக்கா நித்யாவிற்கு வாட்ஸ் அப் மூலம் தற்கொலை செய்யப் போவதாக மெசேஜ் அனுப்பி விட்டு , லொகேஷனையும் ஷேர் செய்துள்ளார். பின் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துள்ளார். சரியான வேலை இல்லை, திருமணமாகாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடம்பூர் மலை கிராமம், அணைக்கரை, பைரமர தொட்டியை சேர்ந்தவர் மாறன், வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது. அதில் சோளம் விதைத்துள்ளார். இரவு சோளக்காட்டில் காவலுக்கு சென்ற போது மறைந்திருந்த காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து கடம்பூர் எஸ்ஐ பிரபாகரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு மாவட்டத்தில், சம்பா (ரபி) பருவத்தில் நெல் சாகுபடிக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், 1 ஏக்கருக்கு ரூ.573 செலுத்தி எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பயன்பெறலாம். இதற்கு நவம்பர் 15 கடைசி நாளாக இருந்த நிலையில், மத்திய அரசு நவம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது. எனவே விவசாயிகள் விரைந்து பயிர் காப்பீட்டு செய்து கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோபி அருகே புஞ்சை துறையம்பாளையத்தைச் சேர்ந்த தம்பதி முருகன் மற்றும் சித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாத காரணத்தால் விரக்தியில் முருகன் தனது வீட்டில் தூக்கிட்டு கொண்டார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறிய நிலையில் சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் ஓம்காா் பாலாஜி கைதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் பெருந்துறையில் நேற்று நடைபெற்றது.பெருந்துறை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் ரங்கராஜன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில இலக்கிய அணி செயலாளா்,மாநில செயலாளா், மாநில பொதுச்செயலாளா் உள்பட 35 பேரை போலீசார் கைதுசெய்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சற்று சிறிது நேரத்திற்கு முன்பு கே.என்.பாளையம் – கடம்பூர் மலைப்பாதையில் சாலையோர தடுப்புச்சுவரில் சிறுத்தை ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் செல்போனில் போட்டோ எடுத்து கொண்டு செல்கின்றனர்.
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழனிக்கு 20.11.2024 புதன்கிழமை அன்று நண்பகல் 1.00 மணிக்கு கரும்புச் சர்க்கரை கொள்முதல் செய்ய உள்ளதால் விவசாயிகள் கரும்புச் சர்க்கரையை 20.11.2024 முற்பகல் 11.00 மணிக்குள் கவுந்தப்பாடி விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பெருந்துறை வட்டம், ஈங்கூர் குட்டப்பாளையம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருவளூர் மாரியம்மன் பட்டத்தரசி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. இதில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் JK (எ) S.ஜெயக்குமார் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
Sorry, no posts matched your criteria.