India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (‘வாகனத்தில் பயணம் செய்யும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்போம்’) என்ற வாசகம் கொண்ட புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக சமூக வலைதளத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் P.S.N.A பொறியியல் கல்லூரியில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் “போலீஸ் அக்கா” திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரியில் பயின்று வரும் மாணவியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாலியல் ரீதியான பிரச்சினைகள் மற்றும் இதர பிரச்சனைகள் குறித்து உதவிகோரும் வகையில் ஒவ்வொரு கல்லூரிக்கும் ‘போலீஸ் அக்கா’ என்ற பெயரில் ஒரு காவல் அதிகாரியை நியமனம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்துவதற்கு அல்ல என தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் குறித்த உண்மையான புள்ளி விவரங்களை சேகரிக்கவும் ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பட்டியலின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக தொண்டாற்றி வருவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. www.tn.gov.in/ta/forms/deptname/1-ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே முத்தழகுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் போக்குவரத்து வாகனங்களை செல்ல விடாமல் நடுரோட்டில் துண்டை விரித்து தூங்கியபடி அட்டகாசம் செய்தார். அதோ போல் திண்டுக்கல்லில் நடு ரோட்டில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டிவைடரில் அரை நிர்வாணத்தில் அமர்ந்தபடி குடிபோதையில் ஒருவர் யோகாசனம் செய்து கொண்டிருந்தார்.
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சனையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ம் தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுகளுடன் விழா துவங்கியது. நேற்று மாலை கிரிவலப் பாதையில் உள்ள அசுரர்களை வதம் செய்யப்பட்டது. அதை கொண்டாடும் விதமாக இன்று மலைக்கோவிலில் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
திண்டுக்கல், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் நேற்று சூரசம்ஹாரம் நடந்த நிலையில் இன்று திருக்கல்யாணம் நடக்க இருக்கிறது. இதற்காக அதிகாலை முதலே வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இங்கு பழனி காவல்துறை சார்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒலிபெருக்கியின் மூலம் செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தில் விலை கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து நவம்பர் மூன்றாம் தேதி வரை தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தது. இந்நிலையில் தற்போது 1 நாளில் மட்டும் ரூ.1,320-க்கு விலை குறைந்துள்ளதால் திண்டுக்கல், நிலக்கோட்டை நகை கடைகளில் எதிர்பார்த்த அளவு பொதுமக்கள் நகையை வாங்கிச் செல்வதாக நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.) / வட்ட வழங்கல் அலுவலகங்களில் வரும் 9ஆம் தேதி அன்று பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று திண்டுக்கல் நகர் மற்றும் ஊரகங்களான கொடைக்கானல், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய இடங்களில் இரவு ரோந்து காவலர்களின் விவரத்தையும் அவர்களது தொலைபேசி எண்ணையும் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.