India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனி மலை முருகன் கோயிலில் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவை- பழனி-திண்டுக்கல் சிறப்பு ரயில் தைப்பூசத்தையொட்டி கோவை – திண்டுக்கல் இடையே பிப்-5ம் தேதி முதல் 14 வரை முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பழநி தைப்பூசத்தை முன்னிட்டு கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் (எண்.06106/07) இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலானது ஜன.05 முதல் ஜன.14 வரை இயக்கபடவுள்ளது. மேற்படி ரயில் கோவையில் இருந்து காலை 9.35 மணிக்கு கிளம்பி, மதியம் 12.05க்கு பழநிக்கு வந்து , திண்டுக்கலுக்கு 1 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் மதியம் 2 மணிக்கு கிளம்பி பழநிக்கு 3 மணியளவில் வந்து மாலை 5.50க்கு கோவை சென்றடையும்.
திண்டுக்கல்லில் இன்று (11.01.2025) முக்கிய நிகழ்வுகள். ➢GTN – இயற்கை & யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் இரத்ததானம் & கண்தான முகாம் காலை 10.30 மணி திண்டுக்கல் மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள SDAT விளையாட்டு மைதானத்தில் மைதானத்தில் நடைபெறுகிறது. ➢ பெரியகலையம்புத்தூா் ஜல்லிக்கட்டு ஆன்லைன் முன்பதிவு காலை 11 மணி துவக்கம். ➢ திண்டுக்கல் சிவன் கோயில்களில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு.
நத்தம் எல்.வலையபட்டியை சேர்ந்த சின்னையா(45) விவசாயி என்பவரை கடந்த 18-11-2023 அன்று கொலை செய்தது தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஒரு வருடம் கழித்து விசாரணையில் முன்னேற்றம் அடைந்து, மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக சின்னையாவின் வீட்டின் அருகே வசித்து வரும் உறவினர் ரமேஷ்(34), அதேபகுதியை சேர்ந்த தினேஷ்(36) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள்(ம) காளைகளின் உரிமையாளர்கள் இன்று (11.1.25) காலை 8 மணி முதல் 13.1.25 அன்று மாலை 5 மணிக்குள் முன் பதிவு செய்ய வேண்டும். புக் பண்ண <
ஒடடனசத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்து வருகிறது ஒடடனசத்திரம் மூலசத்திரம் ஶ்ரீ ராமபுரம் செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சற்று சிரமத்துடன் நடை பயணம் செய்கின்றனர். திடீரென பெய்த மழையால் சற்று குளிர் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல்லில் இன்று 10-01-2025 இரவு 11.00 மணி முதல் நாளை சனிக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது…
திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு அறிவிக்கையின்படி, ஜல்லிக்கட்டு நடத்த தகுதி பெற்ற கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேற்படி ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான இணையதள முகவரியான https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், https://tnvelaivaaippu.gov.in அல்லது www.tnvelaivaaippu.gov.in வேலைவாய்ப்பு இணையதளத்தில் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அனைத்து கலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து 28.02.2025-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (சமூக வலைதளங்களில் பல போலியான முகங்களில் மோசடி நபர்கள் வலம் வருகின்றனர். எச்சரிக்கை) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம், திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.