India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல், கொட்டபட்டி, ஜெயந்தி காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர் (22). இவரும் இவரது கணவர் ஜெயபாலனும் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் ஜெனிபர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெனிபரின் பெற்றோர்கள் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகாரில் திருமணமாகி 8 மாதங்களே ஆவதால், திண்டுக்கல் ஆர்.டி.ஓ., விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விசிக முகாம் உறுப்பினர் அகரமுத்துகுமார். இந்நிலையில் அகரமுத்துகுமாருக்கும் அங்குசாமி என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்குசாமி, அவரது உறவினர் ஷியாம் சேர்ந்து அகரமுத்துகுமார், அவரது அண்ணன் ஜெய்கணேசை கத்தியால் குத்தினர். இதில், அகர முத்துகுமார் இறந்தார். ஜெய்கணேஷ் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம். திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (சமூக வலைதளங்களில் பல போலியான பெயர்களில் மோசடி நபர்கள் வலம் வருகின்றனர். அவர்களின் வலையில் சிக்கி உங்கள் பணத்தை இழக்க வேண்டாம்.) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை – மதுரை இடையே முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு ரயில் இயக்கப்பட உள்ளது உள்ளது. இந்த ரயிலானது ஜனவரி 18 அன்று காலை 10.45 மணிக்கு புறப்பட்டு இரவு 07.15 மணிக்கு மதுரை சேரும். ஜனவரி 19 அன்று மாலை 4:30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு எழும்பூருக்கு 9:45 மணி சென்று சேரும். இந்த ரயில், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக என்ற கட்சி, வெளியே தெரிய காரணமாக இருந்தது, 1973ஆம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் தான். புதிதாக உருவாக்கப்பட்டு 6 மாதமே ஆன ஒரு கட்சி, இடைத்தேர்தலில், திமுகவை 3ம் இடத்திற்கு தள்ளி, 2.6 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடியது. எம்.ஜி.ஆர் என்ற தலைவனை, தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக, திண்டுக்கல் இடைத்தேர்தல் தேர்தல் முடிவுகள் மாற்றின.
பட்டிவீரன்பட்டி அருகே இரு கிராமங்களை சேர்ந்த 18 வயது சிறுவர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று ஒரு தரப்பு சிறுவன், அவரது நண்பர்களுடன் சென்று மற்றொரு சிறுவனிடம் தகராறு செய்துள்ளனர். அருகில் வசிக்கும் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் (30) அவர்களை விலக்கிவிட முயன்றபோது ஒரு தரப்பினர் தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது. இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (சீட் பெல்ட் அணிவோம். பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்.) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 3 நாள்களாக அதிகாலை 4 மணிக்கே சந்நிதி திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இந்த பொங்கல் விடுமுறை காரணமாக, புதன்கிழமை கோயிலின் வெளிப்பிரகாரத்திலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். சுமாா் நான்கு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தா்கள் பக்தர்கள் தரிசனம் செய்தனா். செய்தனா்.
ஒட்டன்சத்திரம் அருகே சாலைப்புதூர் அருகே பாதயாத்திரை பக்தர்கள் மீது புவனேஸ்வரன் என்பவர் ஓட்டி வந்த பொலிரோ கார் மோதியதில் மதுரை, மேலஅனுப்பானடியை சேர்ந்த அடைக்கலராஜ் மற்றும் மீனாட்சிபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி கேசவன் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.