India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனி பாதயாத்திரை பக்தர்கள் இரண்டு நாட்களாக விட்டுவிட்டு பெய்யும் மழை மற்றும் பனிப்பொழிவால் சிரமப்படுகின்றனர். சூரிய வெளிச்சம் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடனேயே காட்சியளிக்கிறது. நாள் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையுள்ளது. இதனால் அதிகாலை நடப்பதை வழக்கமாக கொண்டுள்ள பக்தர்கள் நேரத்தை மாற்றியுள்ளனர். காலை 10:00 மணிக்கு மணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இன்று 19-01-2025 இரவு 11.00 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது…
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒரு நாளைக்கு ஒரு 50 டன் வரை விற்பனைக்கு வந்த வெங்காயம் தற்பொழுது ஒரு நாளைக்கு ஒரு டன் மட்டுமே வெங்காய மார்க்கெட்டிற்கு வருவதால் வெங்காயத்தின் விலை உயரும் நிலை உள்ளது அவ்வாறு உயர்ந்தால் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 110- ஐ எட்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (சாலையை கடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்போம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம், திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இன்று (19.01.2025) முக்கிய நிகழ்வுகள். ➢புனித செபஸ்தியார் ஆலய அர்ச்சிப்புப் பெருவிழா, நெட்டுத்தெரு, திண்டுக்கல், காலை 10:30 மணி. ➢ ராணி மங்கம்மாள் அறக்கட்டளை 38வது ஆண்டு விழா, நாயுடு மகாஜன நல அறக்கட்டளை சமுதாயக்கூடம், திண்டுக்கல்.காலை 9:30 மணி.➢ கிரிக்கெட் போட்டி, விளையாட்டு மைதானம், மண்டபம் புதுார், பூத்தாம்பட்டி, காலை 9:00 மணி, ஏற்பாடு: எம்.சி.சி. கிரிக்கெட் கிளப்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 84 சதவீதம் பேருக்கு வினியோகம் செய்யப்பட்டது. 1 லட்சம் பேர் வாங்கவில்லை. சுமார் 5 லட்சத்து 75 ஆயிரம் பேர் பரிசு தொகுப்பு வாங்கியுள்ளனர். சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கவில்லை. இது 16 சதவீதம் ஆகும்.
திண்டுக்கல், கொடைக்கானல் பஸ் நிலைய பகுதியில் நேற்று காட்டெருமை ஒன்று உலா வந்தது. அந்த காட்டெருமை திடீரென்று பஸ் நிலையத்துக்குள் புகுந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பயணிகள் அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களுக்கு ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து காட்டெருமை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் இன்று 18-01-2025 இரவு 11.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது…
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சின்னாளப்பட்டி பேருந்து நிலையம் அருகே பீரோ கம்பெனியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இது சின்னாளப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.