Dindigul

News January 20, 2025

திண்டுக்கல்லில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து போலீசார் தனியார் பள்ளியில் சோதனை நடத்தி வருகின்றனர்.

News January 20, 2025

வைகை இலக்கியத் திருவிழா 2025

image

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் ஆகியவை சார்பில் வைகை இலக்கியத் திருவிழா-2025 திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லுாரியில் 23.01.2025 மற்றும் 24.01.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News January 20, 2025

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 187 மனுக்கள்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது .இன்றைக்கு பொதுமக்களிடமிருந்து 187 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

News January 20, 2025

திண்டுக்கல் போலீஸ் விழிப்புணர்வு படம் வெளியீடு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று, ‘UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்கவும்’ என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

News January 20, 2025

அமைச்சரை சந்தித்த திண்டுக்கல் சரக டிஐஜி

image

திண்டுக்கல் சரக காவல்துறைத் தலைவராக (டிஐஜி) புதிதாக பொறுப்பேற்றுள்ள வந்திதா பாண்டே இன்று அமைச்சர் அ.ர.சக்கரபாணியை நேரில் சந்தித்து, மலர் பூங்கொத்துகள் கொடுத்து, வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார்.

News January 20, 2025

திண்டுக்கல்லில் அலைமோதிய கூட்டம்

image

திண்டுக்கல்,பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு சென்ற மக்களால் திண்டுக்கல் பஸ், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் 6 நாள் தொடர்விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்தது. திண்டுக்கல்லில் டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள் நேற்று காலையில் இருந்தே திண்டுக்கல் பஸ், ரயில் நிலையங்களுக்கு படையெடுக்க தொடங்கினர். இதனால் அதிகமாகி காணப்பட்டது.

News January 20, 2025

திண்டுக்கல்லில் இன்று மழைக்கு வாய்ப்பில்லை

image

திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வந்த நிலையில் இன்று நாள் முழுவதும் மழைக்கு வாய்ப்பில்லை என தனியார் வானிலை ஆய்வு மையங்கள் கணித்துள்ளன. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

News January 20, 2025

பழனி BUS STAND-இல் குவிந்த மக்கள்!

image

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களிலிருந்து வெளியூர்களுக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட பயணிகள் சென்றனர். மேலும் பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் இன்று பள்ளி அலுவலகம் செல்ல வேண்டி உள்ளதால் நேற்று இரவு சொந்த ஊருக்கு திரும்ப பேருந்து பிடிப்பதற்காக பழனி பேருந்து நிலையத்தில் நேற்று இரவு குவிந்த பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

News January 20, 2025

உண்ணி காய்ச்சலுக்கு 9 பேர் சிகிச்சை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உண்ணி காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. மாவட்ட பகுதிகளில் உண்ணி  காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்ச்சல் பாதிப்புக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த நிலையில் உண்ணி காய்ச்சல் பாதிக்கப்பட்ட 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News January 20, 2025

திண்டுக்கல்லில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

image

திண்டுக்கல்லில் இன்று (20.01.2025) முக்கிய நிகழ்வுகள். ➢ திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் மக்கள் குறைதீர் கூட்டம், காலை 10:00 மணி. ➢ காப்பு கட்டுதல், ஆதிபராசக்தி கோயில் வளாகம், சமயபுரம் மாரியம்மன் கோயில், களர்பட்டி, அய்யலூர், காலை 9:00 மணி, ஏற்பாடு: சமயபுரம் மாரியம்மன் பாதயாத்திரை குழு.➢ சோமவார பூஜை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 8:00 மணி.

error: Content is protected !!