Dindigul

News November 9, 2024

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல் : மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பி.வ., மி.பி.வ., மற்றும் சீ.ம., இன மாணவ, மாணவிகள் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது உடன் அரசு அதிகாரிகள் இருந்தனர்.

News November 9, 2024

திண்டுக்கல்: விழிப்புணர்வு புகைப்படம் வெளியீடு 

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (‘ஆன்லைனில் வாகனம் வாங்குவோர் வாகனத்தை நேரில் பார்த்து ஆவணத்தை சரிபார்த்த பின் வாங்கவும்’) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News November 9, 2024

பசுமை வரி சம்பந்தமாக ஆலோசனை கூட்டம்

image

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருகைப் புரியும் வாகனங்களுக்கு இ.பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை மற்றும் 5 லிட்டருக்கு குறைவான தடை செய்யப்பட்ட அனைத்து வகையான நெகிழி பாட்டில்களை பயன்படுத்தும் தனிநபர், வியாபாரிகள் (ம) நிறுவனங்களுக்கு ரூ.20/-(ஒரு பாட்டிலுக்கு) பசுமை வரி விதிக்கும் நடைமுறையினை முழுவீச்சில் செயல்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட கூட்டம் இன்று நடைபெற்றது.

News November 9, 2024

பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் ரூ.20 அபராதம்

image

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் ரூ.20 அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதன்படி, கொடைக்கானல் வரும் வாகனங்கள், பேருந்துகள், தங்கும் விடுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 

News November 9, 2024

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ‘(கிளிக் செய்யும் முன் சிந்தியுங்கள்)’ என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக திண்டுக்கல் மாவட்ட சமூக வலைதள Instagram பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News November 9, 2024

வாலிபர் படுகொலை: மூவர் மீது பாய்ந்தது குண்டாஸ் 

image

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வாலிபர் தலை சிதைத்து படுகொலை செய்த சம்பவத்தில் மேலும் அய்யனார்(25), மாசாணம்(37), சந்தோஷ்(20) ஆகிய 3 பேரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

News November 9, 2024

திண்டுக்கல் போலீசார்  விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது (‘முன்னாள் செல்லும் வாகனத்திற்கு 10 மீட்டர் இடைவெளி விட்டு பின் தொடரவும்’) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிட்டுள்ளது.

News November 9, 2024

பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ.100 

image

திண்டுக்கல், வத்தலகுண்டு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ரூ.100-க்கு விற்பனையானது. மழைக்காலங்களில் பொதுவாக வெங்காயம் விலை உயர்வை சந்திக்கும். ஆனால் தற்போது மழை தொடங்குவதற்கு முன்பே வத்தலகுண்டு பகுதிகளில் பெரிய வெங்காயம் 100-க்கு விற்பனையானது. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்திருப்பதால் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றனர்.

News November 8, 2024

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை திரு. சிபின் IAS மற்றும் திரு. தனஞ்செழியன் DSP தலைமையில் காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.