India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் – தாராபுரம் சாலை பிரிவு அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் ஒட்டன்சத்திரம் ஒன்றியச் செயலா் சிவக்குமாா் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 106 மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்தனா். இதேபோல, மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மொத்தம் 1,080 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த வாரத்தில்மட்டும் 8 பேர் உண்ணிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல்அரசு மருத்துவமனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஒரு சிலர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். புதிதாக சிலருக்கு உண்ணிகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்த வாரத்தில் மட்டுமே 8 பேர் அனுமதிக்கபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் ஊரகம் திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, கொடைக்கானல்,பழனி, உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள எண்கள் வெளியீடப்பட்டது.
நத்தம் அருகே உள்ள சமுத்திராபட்டி பேருந்து நிறுத்தம் முன்பாக மினி வேன் மோதியதில் சாலையை கடக்க முயன்ற கேசம்பட்டியை சேர்ந்த பூ விற்பனை செய்து வரும் ராக்காயி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று ‘குழந்தை திருமணத்தை தடுப்போம். குழந்தைகளின் எதிர் காலத்தை காப்போம்’ என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின், உப கோவிலான பெரியநாயகி அம்மன் திருக்கோவிலுக்கு, பழநி திருக்கோயிலால், புதிய தேர் ரூ.41லட்சத்தில் செய்யப்பட்டது. இத் திருத்தேரை இரு கால யாக வேள்விக்கு பின் வரும் 27ம் தேதி காலை 9 மணிக்கு நான்கு ரத வீதிகளிலும் வரும் வகையில் வெள்ளோட்டம் விடப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத்தை ஒட்டி கோவை- திண்டுக்கல் இடையே பிப்ரவரி 5ஆம் தேதி முதல் பிப்14 வரை முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவை-பழனி-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதன்படி வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி முதல் பிப்14ம் தேதி வரையிலான (ஞாயிறு) தவிர10 நாட்களுக்கு இயக்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மா, தென்னை, சிறுதானியங்கள், முருங்கை, மஞ்சள், சின்னவெங்காயம் மற்றும் வெள்ளரி போன்றவற்றைப் சாகுபடி செய்யும் ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வேளாண் விளைப்பொருள்களை ஏற்றுமதி மேற்கொள்வதற்கான சான்றிதழ்களைப் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.15000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 306 கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினத்தன்று (26.01.2025) முற்பகல் 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் 306 கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு, கருத்துக்களை தெரிவித்து, பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று 20-01-2025 இரவு 11.00 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது…
Sorry, no posts matched your criteria.