India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழநி முருகன் கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை உள்ளன. ரோப் கார் சேவையில் 3 நிமிடத்தில் கோயில் செல்ல முடியும். தினமும் பக்தர்கள் ரோப் கார் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (ஜன-30) நடைபெற உள்ளதால் இதன் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வடமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15வயது சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக குஜிலியம்பாறை, கரிகாலியை சேர்ந்த ஈஸ்வரன்(23) என்பவரை வடமதுரை போலீசார், போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று ஈஸ்வரனுக்கு 23 ஆண்டு சிறை தண்டனையும் 1,05,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்களுடன் பேருந்துகள் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான பரிசோதனைகளும் நடப்பதில்லை. இ-பாஸ் நடைமுறை,முறையாகஅமல் படுத்தப்படவில்லை. எனவே பிப்.4ல் நீலகிரி&திண்டுக்கல் ஆட்சியர்கள் காணொலி மூலம் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று இரவு முதல் காலை வரை மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரமும் அவர்களது தொலைபேசி எண்ணையும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று வெளியிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனவும் அறிவித்துள்ளது.
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் எதிரில் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளுடன் கட்டப்பட்டு, நகராட்சியின் மூலம் ஏலம் விடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கலைஞர் நூற்றாண்டு வணிக வளாகம் 90 சதவீத பணிகள் முடிந்து ஒரு சில நாட்களுக்குள் திறப்பு விழா நடைபெற உள்ளது
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று, ‘telegram மூலம் டாஸ்க் கேம் நடைபெறுகிறது. எச்சரிக்கையாக இருக்கவும்’ என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று Instagram சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் இன்று மாநில சிறுதானிய திருவிழாவில் மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நுகர்வோர் மன்றம், பொது மக்கள் கலந்து கொண்டனர். மேலும் சிறுதானிய விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி வழங்கினார்.
ஒட்டன்சத்திரம் போட்டித் தேர்வு மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், தமிழ்நாட்டில் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் பணியிடங்கள் 75,000 காலியாக உள்ளதாகவும் விரைவில் ஜனவரி மாதத்திற்குள்ளாக டிஎன்பிசி குரூப் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்தார்.
திண்டுக்கல், மலைகளில் இளவரசு என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மலையில் உள்ள பேரீஜம் ஏரிக்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இன்று முதல் பேரீஜம் சுற்றுலா தளத்திற்கு வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் M.A, M.Sc உள்ளிட்ட 23 முதுகலை படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை, பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (கியூட்) மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. முதுகலை சேர விரும்பும் மாணவர்கள் http://cuetpg.ntaonline.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.தகவல்களை www. ruraluniv.ac.in www.ruraluniv.ac.in இருந்து பெறலாம் பெறலாம்.
Sorry, no posts matched your criteria.