India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழநிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இடும்பன் குளத்தில் குளித்த பிறகு கோயில் செல்வது வழக்கம். அதன்படி நேற்று சிவகங்கை சேர்ந்த பாதயாத்திரை பக்தர்கள் இளவரசி (35), ஈஸ்வரி (40), சாந்தி (55) குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினர். தீயணைப்புத்துறையினர் அவர்களை உயிருடன் மீட்டனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு, சென்னை பனையூரில் நடைபெற்ற நிர்வாகிகள் நேர்முகத் தேர்வில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக L.தர்மராஜ் என்பவரை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார். மேலும், இணைச்செயலாளராக T.G.பாரத், பொருளாளராக S.அருண்குமார், துணைச்செயலாளர்களாக P.சதீஷ்குமார், S .கார்த்தகா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இன்று 30-01-2025 இரவு 11.00 மணி முதல், நாளை வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி வரை, காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றிய இருவர், காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றனர். திண்டுக்கல் உளவுத்துறை காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஜோதி பாபு, காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். அதேபோல் பழனி ஆயக்குடி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய ரமேஷ் குமார், காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.
திண்டுக்கல் காப்பிளியபட்டி, AD காலனி பகுதியை சேர்ந்தவர் தபால் ஊழியர் சாந்தி (48). இந்நிலையில் இன்று அவரது வீட்டின் கதவு மூடியே இருந்தது. நீண்ட நேரம் திறக்கப்படாததால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்புத் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தபோது, சாந்தி இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தை ஒட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வளர்ச்சி திட்ட இயக்குனர் திலகவதி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
வடமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15வயது சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக குஜிலியம்பாறை, கரிகாலியை சேர்ந்த ஈஸ்வரன்(23) என்பவரை வடமதுரை போலீசார், போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று ஈஸ்வரனுக்கு 23 ஆண்டு சிறை தண்டனையும் 1,05,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.
பழநி முருகன் கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை உள்ளன. ரோப் கார் சேவையில் 3 நிமிடத்தில் கோயில் செல்ல முடியும். தினமும் பக்தர்கள் ரோப் கார் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (ஜன-30) நடைபெற உள்ளதால் இதன் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வடமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15வயது சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக குஜிலியம்பாறை, கரிகாலியை சேர்ந்த ஈஸ்வரன்(23) என்பவரை வடமதுரை போலீசார், போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று ஈஸ்வரனுக்கு 23 ஆண்டு சிறை தண்டனையும் 1,05,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்களுடன் பேருந்துகள் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான பரிசோதனைகளும் நடப்பதில்லை. இ-பாஸ் நடைமுறை,முறையாகஅமல் படுத்தப்படவில்லை. எனவே பிப்.4ல் நீலகிரி&திண்டுக்கல் ஆட்சியர்கள் காணொலி மூலம் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.