India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மக்களே “திண்டுக்கல்” என பெயர் எப்படி வந்தது தெரியுமா?. “திண்டு” தலையணை போன்று திண்டுக்கல் மலைக்கோட்டை உள்ளதாலும், மலைக்கோட்டை முழுவதும் கல்லால் ஆனதால் “திண்டு” “கல்” என 2 சொற்கள் சேர்ந்து திண்டுக்கல் ஆனதாக கூறப்படுகிறது. மேலும், திண்டைப் போல் பெரிய மலை இருந்ததால் “திண்டுக்கல்” என்றும். இதற்கு திண்டீஸ்வரம் என பெயர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. உங்களுக்கு தெரிஞ்சத கமென்ட் பண்ணுங்க
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய பதிவில் உங்களது கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவது தொடர்பாக வரும் அழைப்புகள் மற்றும் லிங்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை செய்து அறிவுறுத்தியுள்ளனர். சைபர் கிரைம் ஹெல்ப் லைன்: 1930 இணையதளம்: www.cybercrime.gov.in புகார் தெரிவிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய பதிவில் உங்களது கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவது தொடர்பாக வரும் அழைப்புகள் மற்றும் லிங்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை செய்து அறிவுறுத்தியுள்ளனர். சைபர் கிரைம் ஹெல்ப் லைன்: 1930 இணையதளம்: www.cybercrime.gov.in புகார் தெரிவிக்கலாம்.
வத்தலக்குண்டைச் சேர்ந்த சின்னா என்பவரது தொலைந்த சிம் கார்டை பயன்படுத்தி, ஹரிபிரதீப் என்பவர் டெல்லியைச் சேர்ந்த பெண்ணுக்கு ஆபாச படத்தை அனுப்பியுள்ளார். அந்த புகாரில் 9 ஆண்டுகளுக்கு பின் தேனி அல்லி நகரத்தில் பதுங்கியிருந்த ஹரிபிரதீப்பை வத்தலக்குண்டு, டில்லி போலீசார் கைது செய்து நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டில்லி போலீசார் மேல் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
திண்டுக்கல் பேருந்து நிலையப் பகுதியில் தேனி போடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ரவிவர்மா (54) இவர் குடிபோதையில் மயங்கி விழுந்து இறந்து கிடந்தார். தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் அகோரி கலையரசன் தந்தை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களான வெள்ளிநீா் அருவி, பாம்பாா் அருவி, வட்டக்கானல் அருவி, பியா்சோழா அருவி, செண்பகா அருவி, மூலையாறு அருவி, பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், கோக்கா் ஸ்வாக், பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லா் ராக், மோயா் பாயிண்ட், பைன் பாரஸ்ட், தாவரவியல் பூங்கா, மன்னவனூா் சுற்றுச்சூழல் மையம், கூக்கால் ஏரி உள்ளிட்ட இடங்களில் நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
➤உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு ➤கோம்பைப்பட்டி மழையில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் ➤பசுமை வரி தொடர்பாக ஆலோசனை கூட்டம் ➤பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் ரூ.20 அபராதம் ➤வாலிபர் படுகொலை: மூவர் மீது குண்டாஸ் ➤பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ.100க்கு விற்பனை.
திண்டுக்கல் : மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பி.வ., மி.பி.வ., மற்றும் சீ.ம., இன மாணவ, மாணவிகள் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது உடன் அரசு அதிகாரிகள் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.