India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொடைக்கானலில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள சுற்றுலா பஸ்களை இயக்க விதிக்கப்பட்ட தடையை வரும் 18-ந்தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் 108 ஆம்புலன்ஸில் பணியாற்ற சிறப்பு வேலைவாய்பபு முகாம் இன்று (12.11.24) நடைபெறவுள்ளது. இதில், பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம் படித்தவர்கள் பங்கேற்கலாம். இவ்வேலைவாய்ப்பு 12ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 2 மணி நடைபெறும். பழைய கோர்ட் வளாகம் பகுதியில் உள்ள பள்ளியில் நடைபெறுகிறது. மேலும், விபரங்களுக்கு 75500-52551 என்ற எண்ணை அழைக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்றக்கூடத்தில் நவ.15ஆம் தேதி அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. அதனால் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை மனு அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
➤பழனி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது ➤திண்டுக்கல்லில் வாக்காளர் சிறப்பு முகாம் ➤பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தல் ➤108 ஆம்புலன்ஸில் வேலைவாய்ப்பு ➤மெமு ரயில் மதுரை வரை நீட்டிக்கப்படுமா? ➤திண்டுக்கல் எனப் பெயர் எப்படி வந்தது? .
பழனி அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக காலை முதல் விபாயாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சார் ஆட்சியரிடம் மனு அளித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 நாட்களில் ஏற்பாடு செய்து தருவதாக கூறப்பட்ட நிலையிலும், வியாபாரிகள் கலைந்து செல்ல மறுத்தனர். காவல் துறையினர் பேச்சுவார்த்தையிலும் சமரசம் ஏற்படாததையடுத்து 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்குதல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் இம்மாதம், 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். 01.01.2025ஆம் தேதியன்று 18 வயதினை நிறைவு செய்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள என மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று முகநூல் பக்கத்தில், சாலை விபத்துக்களில் நமது தலையில் காயம் ஏற்படுவதால் மட்டுமே பெரும்பாலான உயிரிழப்புகள் நடைபெறுகின்றன. தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை அறிவுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல்லில் 108 ஆம்புலன்ஸில் பணியாற்ற சிறப்பு வேலைவாய்பபு முகாம் நாளை(12.11.24) நடைபெறவுள்ளது. இதில், பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம் படித்தவர்கள் பங்கேற்கலாம். இவ்வேலைவாய்ப்பு 12ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 2 மணி நடைபெறும். பழைய கோர்ட் வளாகம் பகுதியில் உள்ள பள்ளியில் நடைபெறுகிறது. மேலும், விபரங்களுக்கு 75500-52551 என்ற எண்ணை அழைக்கலாம்.
கோவை- திண்டுக்கல் வரை இயக்கப்படும் சிறப்பு மெமு ரயில் சேவை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் ன பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு கோவை- திண்டுக்கல் வரை இயக்கப்பட்ட மெமு ரயிலுக்கு சிறப்பு வரவேற்பு பெற்ற நிலையில், இந்த ரயில் நவம்பர் 30ஆம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த ரயிலை மதுரை வரை இயக்குமாறு ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.