India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசின் முன்மொழி கல்வி கொள்கையை எதிர்த்து மாவட்ட மாணவரணி சார்பில் வேடசந்தூர் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீரா எஸ்டி சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் ராஜாமணி, வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், மற்றும் திமுக நிர்வாகிகள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் சேர்ந்த ஜெயபால் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்த நிலையில் வேடசந்தூரில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளுகிறார்கள். இதில் ரசாயனம் கலப்பதால் மணல் எம்.சாண்ட் போல் உள்ளது. சில சட்டவிரோதமான மணல் ஆலைகள் கலவையை தண்ணீரில் கழுவி கழிவு நீரை ஆற்றில் விடுவதால் மாசடைகிறது. உடனடியாக கனிமவளத் துறையினர் ஆய்வு நடத்த கலெக்டருக்கு உயர் நீதிமன்றம நோட்டீஸ் வழங்கியது.
பழனியாண்டவர் பாலிக்டெக்னிக் கல்லூரியில் Clerk, Typist, Office Assistant காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.58,500 வரை வழங்கப்படுகிறது. இதில் 10, 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க <
பழனி ரயில்வே காவல்நிலையத்தில் பெண் காவலராக பாணியாற்றிய பெண் காவலர் தன்னுடைய பணியை ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய ராஜினாமாவுக்கு உயர் அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததை எதிர்த்ததே காரணம் என்றும், அதனால் பணியிடமாறுதல் செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ஆடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த நத்தத்தை சேர்ந்த சூர்யா(22) என்பவரை நத்தம் காவல் நிலைய போலீசார் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று நீதிபதி சரண் சூர்யாவிற்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் தாளையம் பகுதியில் இன்று நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி சிறுமி உட்பட இருவர் பலியாகின. இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த இரண்டு பேரை உடனடியாக மீட்ட சாமிநாதபுரம் காவல்துறையினர் சிகிச்சைக்காக உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 323 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தினந்தோறும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பல்வேறு வகையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் துறை மூலம் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற்ற வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரில் திண்டுக்கல் அதிமுக முன்னாள் மா.செ.வும், அதிமுக அமைப்பு செயலாளரும், மூத்த நிர்வாகியுமான திண்டுக்கல் மாநகராட்சியின் முதல்மேயர் மருதராஜின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.