Dindigul

News March 1, 2025

திண்டுக்கல் மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச்.1) காலை 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை 7 மணி வரை பல்வேறு இடங்களில் மழை பெய்யவுள்ளது.

News February 28, 2025

 பொருட்கள் சந்தைப்படுத்தும் கண்காட்சி; ஆட்சியர் அறிவிப்பு 

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு சந்தைப்படுத்த ஏதுவாக மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் “விருப்பக் கண்காட்சி” திண்டுக்கல்லில் 01.03.2025 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 28, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை 

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று ‘சமூக வலைதளங்களில் பல போலியான முகங்களில் மோசடி நபர்கள் வலம் வருகின்றனர். எச்சரிக்கை. பதிவினை பதிவிட்டு விழிப்புணர்வு புகைப்படம் காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News February 28, 2025

கோழி, சேவல் அடுத்தடுத்து இறப்பு! காரணம் என்ன?

image

அய்யலூர் அருகே உள்ள வேங்கனூர் களத்து வீட்டை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பழனியாண்டி (60). இவர் கடலை வியாபாரம் செய்து வருவதுடன் தனது வீட்டில் கோழி, சேவல்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் உணவுடன் விஷம் கலந்து வைத்ததை தின்ற பதினைந்து கோழி, சேவல்கள் உயிரிழந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பழனியாண்டி, வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

News February 28, 2025

காட்டில் கிடந்த சடலம்.. அருகில் சென்றவர்களுக்கு அதிர்ச்சி

image

திண்டுக்கல் சிறுமலை 17வது கொண்டை ஊசி பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தாலுகா போலீசார், வனத்துறை அதிகாரிகள் சம்பவத்திற்கு சென்று உடலை ஆய்வு செய்தனர். அப்போது, சடலத்தின் அருகே இருந்த வெடிகுண்டு ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.இதில் 2 போலீஸ், வனத்துறை அலுவலர் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.

News February 28, 2025

மாணவி குளிக்கும்போது வீடியோ எடுத்த வாலிபர் கைது

image

திண்டுக்கல்லை சேர்ந்த 20-வயது கல்லூரி மாணவி. இவர் தனது வீட்டு குளியல் அறையில் நேற்று குளித்துக் கொண்டு  இருந்தார். அப்போது அந்தோணியார் தெரு பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் முகமதுயூசுப்(19) என்ற வாலிபர், அப்பெண் குளிப்பதை வீடியோவாக எடுத்தார். இதுகுறித்து மாணவி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், முகமது யூசுப்பை கைது செய்தனர்.

News February 27, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

image

இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல்,வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்

News February 27, 2025

100 நாள் வேலை திட்டம்; 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமனம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்ய 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் சி.ஓம். பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.பெரம்பலூர், கடலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், கள்ளகுறிச்சி, புதுக்கோட்டையில் குறைதீர்ப்பாளர்கள் நியமனம்.

News February 27, 2025

திண்டுக்கல் மாவட்டம் காவல் துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தினந்தோறும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பல்வேறு வகையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் துறை மூலம் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று இணையத்தில் வங்கி தளங்களை பயன்படுத்திய பிறகு முறையாக Log Out செய்து வெளியே வரவும் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது

News February 27, 2025

மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக சில தினங்களுக்கு முன்பு  பொறுப்பேற்ற சரவணன் 2025- 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தேர்வு உந்தன் வாழ்க்கையின் ஒரு பகுதியே,முடியாது என எதையும் விட்டு விடாதே!முயன்றுபார் நிச்சயம் உங்களால் முடியும்! என வாழ்த்து மடல் வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!