India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம்,பழனி நகராட்சி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பராமரிப்பு பணி காரணமாக 3வது மின் இழுவை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. நிலையில் ஏப்ரல் 16 இன்று 3வது மின் இழுவை ரயிலின் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தது, இதனால் இன்று 3வது மின் இழுவை ரயிலின் சேவை தொடங்கியது.
திண்டுக்கல் மக்களே, ஜிப்லி(Ghibli) புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை டீப் ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி தவறாக சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் க்ரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் பண்ணுங்க! உங்க நண்பர்களும் Ghibli ஆபத்தை தெரிஞ்சுக்கட்டும்.
திண்டுக்கல்: நத்தம் மெயின்ரோடு சிறுமலைபிரிவு அருகில் அமைந்துள்ள கனராவங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இன்று (16.4.2025) பெண்களுக்கான இலவச அழகு கலைபயிற்சிக்கான முன்பதிவு நடைபெறுகிறது. இப்பயிற்சி ஆனது மே5 முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களுக்கு 94426 28434,90802 24511 ,86106 60402 ஆகிய எண்களை அணுகவும். பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க !
வேடசந்தூர் அருகே உள்ள ஜி.நடுப்பட்டி ஊராட்சி கேத்தம்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (55). இவர் நவாமரத்து பட்டியில் இருந்து கேத்தம்பட்டியை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆறு பவுன் நகையை அறுத்துக் கொண்டு பைக்கில் பறந்தனர். இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 14,16,19 வயதுக்குட்பட்ட இருபாலர் கிரிக்கெட் அணிக்கான தேர்வு வரும் ஏப்.18ஆம் தேதி நடக்கிறது. சீலப்பாடி பிரஸித்தி வித்யோதயா பள்ளியில் நடைபெறும் இத்தேர்விற்கு ஆதார், பிறப்புசான்றிதழ், விளையாட்டு உபகரணங்கள், வெள்ளை சீருடையுடன் வரவும். மேலும் விவரம் பெற 96556 63945 எண்ணை அணுகவும். SHARE பண்ணுங்க !
பழனியை அடுத்த ராமநாதன் நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (72). விவசாயியான இவா், நேற்று(ஏப்.15) வயலுக்குச் சென்று விட்டு, ராமநாதன் நகா் பிரதானச் சாலையில் சைக்கிளில் வந்தார்.அப்போது, அங்கு வந்த லாரி மோதியதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, பழனி அடிவாரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது 108 விநாயகர் கோயில். இந்தக் கோயிலில் 16 அடி உயர கஜமுக விநாயகரும் உள்ளார். இங்குள்ள 108 விநாயகர்களை தரிசித்தால் வாழ்வில் 108 நன்மைகள் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள். மேலும், இந்தக் கோயிலில் உள்ள ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் கடன் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
திண்டுக்கல் மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.(ஷேர் செய்யுங்கள்)
திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர், திண்டுக்கல் சீனிவாசன் இன்று திடீர் உடல் நல கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த
மருத்துவர்கள் சீனிவாசனுக்கு உணவு செரிமான பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பழனி, புது தாராபுரம் ரோட்டில் நேற்று முன்தினம் ஒருவரை, மூன்று நபர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகார் அளித்த 2 மணி நேரத்திற்குள், குற்றவாளிகள் மூவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். காவல்துறையின் இந்த மின்னல் வேக நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.