Dindigul

News March 23, 2024

வெயிலின் தாக்கத்தால் நிழற்குடையில் பதுங்கும் பயணிகள்

image

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இன்று(மார்ச்.23) வெயிலின் தாக்கத்தால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் நிழற்குடையின் கீழ் தஞ்சம் அடைகின்றனர். மேலும் மதிய வேளைகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. மேலும் நிழற்குடைகள் போதுமானாதாக இல்லை என பயணிகளிடையே குற்றசாட்டுகள்  எழுந்துள்ளது.

News March 23, 2024

ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.இதனால்,மோப்பநாயின் உதவியுடன் ரயில் நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் தீவீர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

News March 23, 2024

3 கிலோ தங்கம் 1/2 கிலோ வெள்ளி பறிமுதல்

image

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சோதனைச்சாவடி பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்ட போது தேனியில் இருந்து மதுரைக்கு அவ்வழியாக சென்ற ஈச்சர் வாகனத்தை சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 3 கிலோ 600 கிராம் தங்கம், 1/2 கிலோ வெள்ளியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

News March 23, 2024

பழனி பங்குனி உத்திரத் திருவிழாவில் திருக்கல்யாணம்

image

பழனி அடிவாரம் குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் கோயில் முன் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்ட தனிமேடையில் இன்று(மார்ச்.22) நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து தம்பதி சமேதராக சுவாமி, வெள்ளித்தேரில் சந்நிதி வீதி, ரதவீதிகளில் உலா எழுந்தருளுகிறார். நாளை(மார்ச்.23) மலையடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் தேரோட்டம் நடைபெறுகிறது.

News March 22, 2024

இன்று முதல் போட்டி தேர்வு மையம் தொடக்கம்

image

தமிழகத்திலேயே முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காலாஞ்சிபட்டியில் ரூபாய் 15- கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு அரசு போட்டி தேர்வு இலவச மையத்தை கடந்த சில மாதங்கள் முன்பு தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுக்கு இங்கு இலவச பயிற்சி வகுப்பு இன்று துவங்கியது.

News March 22, 2024

திண்டுக்கல்: 26,508 வாக்காளர்களுக்கு விருப்ப படிவம்

image

2024 மக்களவைத் தேர்தலில், 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வகையில் 32,594 வாக்காளர்கள் கண்டறியப்பட்டு 26,508 வாக்காளர்களுக்கு விருப்பப் படிவம் (Form 12D) வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

News March 22, 2024

திண்டுக்கல்: யார் இந்த திலகபாமா

image

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா; பட்டிவீரன்பட்டியில் பிறந்து சிவகாசியில் வசித்து வருகிறார். கணவர் இருதய சிகிச்சை மருத்துவர். மகன்களும் மருத்துவர்கள், 3-சிறுகதை தொகுப்புகள்,11- கவிதை தொகுப்புகள், 2 வரலாறு தொகுப்புகள் எழுதியுள்ளார். மது ஒழிப்பு போராட்டம், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளார்.

News March 22, 2024

திண்டுக்கல்: சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

image

வடமதுரை பகுதியில் கடந்த ஆண்டு 2023ஆம் ஆண்டு 10 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மனோஜ் குமார்( 21) என்ற இளைஞரை வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி இன்று 21ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.3000 அபதாரம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

News March 22, 2024

திண்டுக்கல்: 18-சித்தர் கட்சி சார்பில் வேட்பு மனு

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாக வளாகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று பதினெட்டு சித்தர்கள் கட்சி சார்பாக மக்களவை தேர்தலில் போட்டியிட ஆண்டிமடம் ஆறுமுகசாமி என்பவர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

News March 22, 2024

திமுக செயல் வீரர் கூட்டம்

image

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. தலைமையிலான – I.N.D.I.A. கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம்  இன்று S.K.M. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள்  பெரிய சாமி, சக்கரபாணி கலந்து கொண்டு கூட்டணி கட்சியினரிடம் வேட்பாளரை அறிமுகம் செய்துவைத்தார்.

error: Content is protected !!