Dindigul

News March 16, 2024

திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

image

இந்திய தேர்தல் ஆணையர் அவர்கள் நாடாளுமன்ற பொது தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து திண்டுக்கலில் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று இரவு மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் கீழ் கட்சி சுவர் விளம்பரம், மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றும் பணியை ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.

News March 16, 2024

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

இந்திய பாராளுமன்ற  பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்ட இன்றிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில்
ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000-க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News March 16, 2024

திண்டுக்கல்லில் கருத்தடை திட்டத்துக்கு அழைப்பு

image

திண்டுக்கல் ஆட்சியர் அறிக்கையில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ஒரு பெண் குழந்தையுடன் பெற்றோர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தால், குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைக்கு பின் செய்தால் குழந்தைகள் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்புத்தொகை, ரசீது வழங்கப்படுகிறது.இதற்கு ஆதார் நகல் , குடும்ப புகைப்படத்துடன் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கேட்டுள்ளார்.

News March 16, 2024

திண்டுக்கல் தேர்தலை முன்னிட்டு போஸ்டர் அகற்றம்

image

இன்று பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து,
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி, நகரமைப்பு அலுவலர் ஜெயக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் வள்ளி ராஜம், ஆய்வாளர் வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளர் தக்ஷிணாமூர்த்தி மற்றும் சுகாதார பணியாளர்களை கொண்டு மாநகராட்சிக்கு சொந்தமான காமராஜர் பேருந்து நிலையத்தில் அரசியல் கட்சி சார்பாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றினர்.

News March 16, 2024

திண்டுக்கல்: முதியவர் ரயிலில் அடிபட்டு பலி!

image

திண்டுக்கல் அடுத்த A.வெள்ளோடு அருகே கரிசல்பட்டி பகுதியில் ஆரோக்கியம் என்பவர் இன்று(மார்ச்.16) ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 16, 2024

திண்டுக்கல் முதல்வரை சந்தித்த வேட்பாளர்

image

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்கள் இன்று 16.02.2024- தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். உடன் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News March 16, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 29 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!