India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யவ ந்தார் . அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது, இரட்டை இலையை காண்பித்து ஓட்டு வாங்கும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. மக்கள் அனுதினமும் மக்களுக்கு யார் நல்லாட்சி செய்கிறார் என்பதை தெரிந்துகொள்கின்றனர் என்றார்.
பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் இன்று வந்தனர். தீர்த்த காவடி எடுத்து வந்தவர்கள் மலை மீது அமர்ந்து பிரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வந்த தீர்த்தத்தை முருகனுக்கு செலுத்தி வழிபட்டனர். பக்தர்கள் வருகையால் மலைக்கோயில் நிரம்பி காணப்பட்டது.
அதிமுக கூட்டணி கட்சி செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் விசுவநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி திண்டுக்கல் மக்களவை தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்கை அறிமுகப்படுத்தினர் கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மக்களவை தொகுதி வேட்பாளராக ஆயக்குடி பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் மனோகரன் முருகராஜ் ரமேஷ் அஜித்குமார் சந்திரன் ஆடலூர் ராமமூர்த்தி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மனுவை தாக்கல் செய்தார்.
திண்டுக்கல் மக்களவை தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தம் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, செந்தில்குமார் எம்எல்ஏ உள்ளிட்ட பலரும் இருந்தனர். அதேபோன்று, பாமக, அதிமுக வேட்பாளர்களும் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் முகமது முபாரக் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சந்தன பிரியா பசுபதி பாண்டியன் என உடன் இருந்தனர்.
திண்டுக்கல் அவர்லேடி பள்ளி அருகே உள்ள CKCM நகர் பகுதியில் நேற்று வீரா கௌதம் என்ற இளைஞரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயற்சித்தனர். இதில் தலையில் படுகாயமடைந்த வீரா கௌதம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திண்டுக்கல் தெற்கு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பங்குனித் திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் இதனை எடுத்து பழனி மலைக்கோயிலின் உச்சி கோபுரத்தின் மீது நிலவு அருகே தெரிந்து ரம்மியாமாக காட்சியளித்தது இது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது .இக்காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது
திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி, வேடசந்தூர், ஆத்தூர், விளாம்பட்டி, எரியோடு, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு மது விற்ற கருணாநிதி (49), பெருமாள் (47)ரவி (47), சதீஷ்குமார் (38), முருகன் (63), முருகேசன் (43), விஜயன் (56), பால்ராஜ் (36), இளையராஜா (35), மாரியப்பன் (45), சிலம்பரசன் (34), செல்வம் (61),அழகு ராஜபாண்டி (36), சேவுகன் (58) 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.