Dindigul

News March 26, 2024

பிரச்சாரத்தின் போது டீ குடித்த அமைச்சர்

image

திண்டுக்கல்லில் இந்திய கூட்டணி கட்சி சிபிஎம் நாடாளுமன்ற வேட்பாளர் ஆதரித்து கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஆத்தூர் தாலுகா பஞ்சம்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் பெரியசாமி தெருவோர தேநீர் கடையில் சிபிஎம் வேட்பாளர் உடன் அமர்ந்து வடை, டீ சாப்பிட்டுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

News March 26, 2024

திண்டுக்கல்: சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல்

image

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி, சில்லப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி நாகஜோதி(37). இவர் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கொடியிடம் சுயேட்சையாக போட்டியிட  வேட்பு மனுவை வழங்கினார். 

News March 26, 2024

எஸ்டிபிஐ வேட்பாளர் சொத்து மதிப்பு 

image

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ,  வேட்பாளர்கள் முகமது முபாரக் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் பெயரில் ரூ.4.54 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.4.50 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள், தனது மனைவி பெயரில் ரூ.6.28 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

News March 26, 2024

திமுக வேட்பாளர் சொத்து மதிப்பு வெளியீடு

image

திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சச்சிதானந்தம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தனது பெயரில் ரூ. 4.69 லட்சம், மனைவி பெயரில் ரூ.7.28லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.14 லட்சம் மதிப்பிலான பூர்விக அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தனது பெயரில் ரூ.3.10 லட்சம், மனைவி பெயரில் ரூ.4.75 லட்சம் என மொத்தம் ரூ.7.85 லட்சம் கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

News March 26, 2024

திண்டுக்கல் கொலையில் 3 பேர் கைது

image

திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகே உள்ள சி.கே.சி.எம் காலனி பகுதியைச் சேர்ந்த வீராகௌதம் கொலை செய்யப்பட்ட வழக்கில்  போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சவேரியார் பாளையம் நேருஜி நகர் பகுதியை சேர்ந்த அஜய்குமார் (24), மதுரை சேர்ந்த விஜய் ஆதி ராஜ், திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த மோகன் சுந்தர் (38) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

News March 26, 2024

மேடையில் கண்ணீர் விட்ட திண்டுக்கல் சீனிவாசன்

image

திண்டுக்கல் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வேட்பாளர் பேசிய பொழுது தாய் மற்றும் தந்தை ஆகியோரை இழந்த தனக்கு முன்னாள் அமைச்சர்கள் இரு அப்பாக்களாக உள்ளனர் என பேசிய போது முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மனம் உருகி தேம்பி கண்ணீர் விட்டு அழுதார். இது கட்சியினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

News March 26, 2024

திண்டுக்கல் அருகே விபத்து: ஒருவர் பலி

image

பழனி அடுத்த பெரியகலையமுத்தூரைச் சோ்ந்தவா் கோட்டைச்சாமி (48). இவா் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தாா். இவா் நேற்று டூவீலரில் பழனி சிவகிரிப்பட்டி புறவழிச்சாலையில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு டூவீலர் நேருக்கு நோ் மோதியது கொண்டது. இதில் பலத்த காயமடைந்த கோட்டைச்சாமி பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

News March 26, 2024

வேடசந்தூர் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

image

வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் சாலையில் சீத்தமரம் நான்கு வழி சாலையில் தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். பழனியிலிருந்து வேடசந்தூர் நோக்கி வந்த காரை ஆய்வு செய்ததில் ரூ.1 லட்சம் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News March 25, 2024

ஒட்டன்சத்திரம்: மார்ச் 31ல் இலவச முகாம்

image

ஒட்டன்சத்திரம் தும்மிச்சம்பட்டி ரோடு பழனியப்பா திருமண மஹாலில் ஒட்டன்சத்திரம் எலைட் ரோட்டரி சங்கம் மதுரை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை,
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி  நடைபெறுகிறது. முகாமிற்கு ஆதார் நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகலில் தங்களது தொலைபேசி எண் எழுதி வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

News March 25, 2024

கொடைக்கானல் மக்களுக்கு வேட்பாளர் வாக்குறுதி

image

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திண்டுக்கல் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் இன்று 25.03.2024- கொடைக்கானல் பளியர் பழங்குடி சமூகத்திற்கு S T சான்று கிடைப்பதற்கு ஒன்றிய அரசுடன் போராடுவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

error: Content is protected !!