Dindigul

News March 17, 2024

திண்டுக்கலில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று மார்ச்.17 வெளியிட்ட அறிக்கையில் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் எனவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் விண்ணப்பம் செய்யலாம் எனவும் படிவம் 6- ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம், மேலும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

News March 17, 2024

நத்தம் அருகே மீன் பிடி திருவிழா

image

திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செங்குளத்தில் பாரம்பரிய மீன் பிடி திருவிழா இன்று(மார்ச்.17) நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு பாரம்பரிய முறைப்படி  குளத்தில் இறங்கி வலை, கத்தா, கூடை, சேலை, கொசு வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க தொடங்கினர். அதிக எடையுள்ள மீன்கள் கை நிறைய கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அள்ளிச் சென்றனர்

News March 17, 2024

கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

image

கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக பிரையண்ட் பூங்கா, பில்லர்ராக், மோயர் பாயிண்ட், வெள்ளிநீர் வீழ்ச்சி, பைன்பாரஸ்ட் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக காணப்பட்டனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News March 17, 2024

ஒட்டன்சத்திரம் அருகே கடமான் பலி

image

ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பபிள்ளைபட்டி கிராமத்திலுள்ள பெரியசாமியின் தோட்டத்தில் நேற்று ஆண் கடமான் ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வனப்பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடமானின் உடலை மீட்டு பின்னா் விருப்பாட்சி கால்நடை மருத்துவா் சரவணபவா கடமானை உடற்கூறாய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News March 16, 2024

திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

image

இந்திய தேர்தல் ஆணையர் அவர்கள் நாடாளுமன்ற பொது தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து திண்டுக்கலில் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று இரவு மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் கீழ் கட்சி சுவர் விளம்பரம், மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றும் பணியை ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.

News March 16, 2024

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

இந்திய பாராளுமன்ற  பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்ட இன்றிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில்
ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000-க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News March 16, 2024

திண்டுக்கல்லில் கருத்தடை திட்டத்துக்கு அழைப்பு

image

திண்டுக்கல் ஆட்சியர் அறிக்கையில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ஒரு பெண் குழந்தையுடன் பெற்றோர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தால், குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைக்கு பின் செய்தால் குழந்தைகள் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்புத்தொகை, ரசீது வழங்கப்படுகிறது.இதற்கு ஆதார் நகல் , குடும்ப புகைப்படத்துடன் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கேட்டுள்ளார்.

News March 16, 2024

திண்டுக்கல் தேர்தலை முன்னிட்டு போஸ்டர் அகற்றம்

image

இன்று பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து,
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி, நகரமைப்பு அலுவலர் ஜெயக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் வள்ளி ராஜம், ஆய்வாளர் வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளர் தக்ஷிணாமூர்த்தி மற்றும் சுகாதார பணியாளர்களை கொண்டு மாநகராட்சிக்கு சொந்தமான காமராஜர் பேருந்து நிலையத்தில் அரசியல் கட்சி சார்பாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றினர்.

News March 16, 2024

திண்டுக்கல்: முதியவர் ரயிலில் அடிபட்டு பலி!

image

திண்டுக்கல் அடுத்த A.வெள்ளோடு அருகே கரிசல்பட்டி பகுதியில் ஆரோக்கியம் என்பவர் இன்று(மார்ச்.16) ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 16, 2024

திண்டுக்கல் முதல்வரை சந்தித்த வேட்பாளர்

image

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்கள் இன்று 16.02.2024- தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். உடன் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!