Dindigul

News October 10, 2024

திண்டுக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் மற்றும் மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி
மாணவர்களுக்கானப் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன. விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ (அ) தொலைபேசி (எண் 0451-2461585) வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News October 10, 2024

திண்டுக்கல்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி மன்றக்கூடத்தில் 18.10.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள், அரசின் மானியத்திட்டங்கள், மேலும், விவசாயிகள், விவசாயம் சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து, தீர்வு கண்டு பயன்பெறலாம்.

News October 10, 2024

அரசு பேருந்தின் ரெடியேட்டர் வெடித்து விபத்து

image

கொடைக்கானலில் அரசு பேருந்து வில்பட்டி கிராமத்திற்கு சென்று விட்டு அங்கிருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு பேருந்து நிலையத்திற்கு வரும் போது நாயுடுபுரம் மலைச்சாலையில் பேருந்து வந்து கொண்டிருக்கும் போது தீடீரென ரேடியேட்டர் வெடித்தது. அப்போது பேருந்தில் பயணித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நல்வாய்பாக ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

News October 10, 2024

இரத்த கொடையாளர் விருது வழங்கிய ஆட்சியர்

image

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று தன்னார்வ இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க இரத்த தான கழகத்திற்கு சிறந்த இரத்த கொடையாளர் விருதை திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி வழங்கினார். உடன் அரசு மருத்துவமனை டீன் மற்றும் அரசு மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News October 10, 2024

கொடைக்கானலில் நிலப்பிளவு: ஆய்வு அறிக்கை வெளியீடு

image

கொடைக்கானலில் ஏற்பட்ட நிலப்பிளவுக்கான முதற்கட்ட ஆய்வு அறிக்கை வெளியானது. இந்திய புவியியல் ஆய்வு மையம் சார்பாக முதற்கட்ட பிரத்யேக ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது; கூனிபட்டி அருகே உள்ள நீர்நிலையில் இருந்து தண்ணீர் அதிகளவில் பூமிக்குள் நுழைந்துள்ளதால் பிளவு ஏற்பட்டிருக்கலாம். நிலப்பிளவு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 10, 2024

திண்டுக்கல்லில் எகிறியது மல்லி பூ விலை

image

இந்தியா முழுவதும் ஆயுதபூஜை நாளை மற்றும் நாளை மறுநாள் விமர்சையாக கொண்டாடப்பட
உள்ளது. பொதுவாக விஷேச தினங்களில் பூக்கள் விலை ஏறுவது வழக்கம். அதை முன்னிட்டு பூ மார்ககெட்டுகளில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மல்லி பூ கிலோ ரூ.1000க்கு மேல் விற்பனையாகிறது. பூக்கள் வாங்க வரும் பொதுமக்கள் விலைகளை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News October 10, 2024

திண்டுக்கல்லில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

image

திண்டுக்கல் மண்டல அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அக்.13-ஆம் தேதி வரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்கு வரும் பயணிகளுக்காக 70 பேருந்துகளும், விடுமுறை முடிந்து சென்னை திருப்புவோருக்கு வசதியாக 70 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2024

பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் இன்று யானை நடமாட்டம் இருப்பதால் மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின் படி சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மறு அறிவிப்பு வரும்வரை தற்காலிகமாக பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி இல்லை என கொடைக்கானல் வனத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் பெரிய ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் .

News October 9, 2024

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

image

உடுமலை அருகே இன்று அதிகாலை காரும் வேனும் மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த தியாகராஜன், அவரது மனைவி ப்ரீத்தி, மகன் ஜெயப்பிரியன் தாயார் மனோன்மணி ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். துக்க நிகழ்ச்சிக்காக கிணத்துக்கடவு சென்று விட்டு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News October 9, 2024

முஸ்லீம் மகளிர் உதவும் சங்க பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில்
முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் 2-ற்கு  நிர்வாகிகள் பதவிகளுக்கு இசுலாமிய  சமுதாயத்தினைச்    சார்ந்த    ஆண், பெண் 
விண்ணப்பிக்கலாம். மேலும்
திண்டுக்கல் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும்  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ  விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.