Dindigul

News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 21, 2024

போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கல்குழி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் காளிதாஸ் (34). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து மாணவியின் தாய் கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த காளிதாசை நேற்று(மார்ச்.20) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News March 20, 2024

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பூங்கொடி அவர்கள் இன்று (20.03.2024) பாராளுமன்ற தேர்தலுக்கு பொதுக்கூட்டம், ஒலிபெருக்கி அனுமதி, தேர்தல் பிரச்சார வாகன அனுமதி, தேர்தல் பிரச்சார பேரணி போன்றவற்றுக்கான அனுமதி பெற SUVIDHA portal என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News March 20, 2024

பழனிக்கு புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

image

பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனஞ்ஜெய் இன்று பொறுப்பேற்றார். சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பணி மாற்றம் செய்யப்பட்ட தனஞ்ஜெய் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். காவலர்கள் தனஜெயனை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். பழனியில் பணியாற்றி வந்த டிஎஸ்பி சுப்பையா தென்காசிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News March 20, 2024

திண்டுக்கல்: 76 இடங்களில் அனுமதி!

image

மக்களவை தோதலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 76 இடங்களில் தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், 254 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களை தவிா்த்து, பிற இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தினால் தேர்தல் நடத்தை விதிமுறைக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறையினா் தெரிவித்தனா்.

News March 20, 2024

திண்டுக்கல் நாம் தமிழர் வேட்பாளர் மாற்றம்

image

2024 பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நிரஞ்சனா அறிவிக்க பட்டிருந்த நிலையில் அவரை நீக்கம் செய்து தற்போது திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் துரை. கையிலைராசன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 20, 2024

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள்: இன்றே கடைசி நாள்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika

News March 20, 2024

இன்று முதல் வேட்புமனு தாக்கல்

image

நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வேட்புமனு பெறும் நிலையில் ஆட்சியர் அலுவலக  நுழைவுப் பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு எல்லைக்கோடு இடப்பட்டுள்ளன. எல்லைக்கோட்டை தாண்டி வேட்பாளருடன் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News March 19, 2024

பழனியில் சிறப்பு அனுமதி சீட்டு கிடையாது

image

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 2024- நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளுக்குட்பட்டு “வி.ஐ.பி சிறப்பு அனுமதி சீட்டுகள் ” வழங்கப்படாது என திருக்கோயில் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் மற்றும் அரசியல் பிரமுகர் பொது தரிசன வழியை பயன்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News March 19, 2024

திண்டுக்கல்: நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

image

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக இன்று 19.03.2024- வழக்கறிஞர் சங்க துணை தலைவர் குமரேசன் அவர்கள் தலைமையில், செயலாளர் உதயகுமார் அவர்கள் முன்னிலையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து உறுப்பினர்களின் கருத்தை கேட்ட பின்பு நாளை 20.03.2024- நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

error: Content is protected !!