India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் அடுத்த குழந்தைபட்டியை சேர்ந்த கட்டட காண்ட்ராக்டர் பாலமுருகன் (32), பழனியில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக சென்ற ரயிலில் வந்தபோது ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் அருகே நேற்று ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் கிரிவீதிகளில் வாகனங்கள் உள்ளே செல்ல உயர் நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் தடுப்பு கம்பிக்கள் அமைக்கப்பட்டது. மேலும் கிரிவீதிகளில் உள்ளே செல்லும் வாகனங்கள் மற்றும் வேறு ஏதாவது வாகனங்கள் சென்றால் வாகன எண், பதிவு செய்து என்ட்ரி செய்து வருகின்றனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள அலுவலர்களை இரண்டாம்கட்ட பயிற்சிக்காக கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்; ஆட்சியர் பூங்கொடி, தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர் திரு. பிரபுலிங் கவாலிகட்டி , முன்னிலையில் இன்று (02.04.2024) நடைபெற்றது.
திண்டுக்கல், தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் பகுதியில் நீர்மோர் சாப்பிட்ட 25 பேர் வாந்தி மயக்கம் ஏற்ப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இவர்களை
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். இதில் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தாடிக்கொம்பு அருகே அகரம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கோயில் விழாவில் பொதுமக்களுக்கு நேற்று இரவு நீர் மோர் வழங்கப்பட்டது. இதில், நீர்மோர் அருந்திய 2 சிறுவர்கள் உட்பட பத்து பேர் வாந்தி மயக்கமடைந்து மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரபாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் திண்டுக்கல், நிலக்கோட்டை, நத்தம், வடமதுரை வேடசந்தூர், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்னர். அப்போது மதுவிற்ற மாணிக்கம், வனராஜா, முத்துக்குமார், நாகராஜ், ஜோசப் ராஜ், உள்ளிட்ட 31 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 485 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்
நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், குஜிலியம்பாறை, நிலக்கோட்டை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
பழனி ஆயக்குடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பரப்புரை மேற்கொண்டார். பொதுமக்கள் முன்பு பேசிய சீமான் அண்ணாமலை தன்னை காப்பி அடித்து பேசுவதாக குற்றம் சாட்டினார். பாஜகவின் பி டீம் இல்லை பாஜக தான் நாம் தமிழர் கட்சியின் பி டீம் என விமர்சனம் செய்தார். பொதுமக்கள் முன்னிலையில் பாட்டு பாடி மைக் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகியதாக உள்ளது.இந்த சாலையை ஆக்கிரமித்து தனி நபர் ஒருவர் தடுப்பு சுவர் கட்டியதால் ஆத்திரமடைந்த இப்பகுதியினர் தடுப்புசுவரை அகற்ற கோரி நகராட்சி குப்பைவண்டியை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மக்களவை தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் பொது பார்வையாளர் பிரபுலிங் கவாலிகட்டி , தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர் ஜரோன்தே விஷால் தஷ்ரத் , காவல்துறை பார்வையாளர் மனோஜ்குமார் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.