India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளா்களுக்கு பூத் சிலீப் வழங்கப்பட்டு வருகிறது. பழனி தொகுதியில் 1,13,769,ஒட்டன்சத்திரம் தொகுதியில் 59598, ஆத்தூா் தொகுதியில் 91980, நிலக்கோட்டை தொகுதியில் 90185, நத்தம் தொகுதியில் 73068, திண்டுக்கல் தொகுதியில் 92658, வேடசந்துாா் தொகுதியில் 61654 என கடந்த 3 நாட்களாக மொத்தம் 5.82 லட்சம் பூத் சிலீப் வழங்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் கவுஞ்சி மலைக்கிராமத்தில் 12 வருடத்திற்கு ஒரு முறை பங்குனி உத்திர பெருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று மஞ்சு விரட்டு நடைபெற்றது. விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் கிராம மக்கள் நோய் நொடியின்றி வாழவும் சிறப்பு பூஜை நடைபெற்றது. மஞ்சு விரட்டில் உழவு மாடுகள் பயன்படுத்தப்பட்டு மாடுகளுக்கு இணையாக இளைஞர்கள் ஓடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 137 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 39 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பழகி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்ததாக முகமதுஆரிப் (21) என்ற வாலிபரை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தேசிய அளவிலான கேலோ இந்தியா உமன்ஸ் வூசு லீக் போட்டிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள பகவதி நகர் உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு அணியில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கலந்து கொண்ட ரேஷ்மி வெண்கலப் பதக்கம் வென்றார். இவருக்கு ஜம்மு காஷ்மீரின் துணை கண்காணிப்பாளர், இந்திய தேசிய தலைமைப் பயிற்சியாளர் குல்தீப் ஹான்டூபாரட்டி சான்றிதழ், பதக்கம், கசோலையுடன் விருது வழங்கினர்.
பழனியை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டியைச் சோந்தவா் கருப்புச்சாமி (85). இவா் கடந்த 1ஆம் தேதி வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அவரது உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடிவந்தனா். நேற்று அதே ஊரை சோந்த வெள்ளைச்சாமி தோட்டத்து கிணற்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் விசாரனையில் இறந்த நபர் கருப்புசாமி என தெரியவந்தது . இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனர்.
கொடைக்கானல் எம்.எம்.தெருவில் உள்ள புதா் பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதைத் தொடா்ந்து கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை – மன்னவனூா் செல்லும் வழியில் உள்ள வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது.
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இ-பைலிங் முறையை கண்டித்து திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக இன்று, ஏப்ரல் 6, 8 ஆகிய 3 நாட்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு செய்வது என்றும், மீண்டும் திங்கட்கிழமை திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் மற்றும் செயலாளர் தெரிவித்தனர்.
பழனி அடுத்த சத்திரப்பட்டி அருகே உள்ள கிணற்றில் இன்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் இறந்த நிலையில் மிதந்து காணபட்டது. இதைக்கண்ட தோட்டத்து விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த சத்திரப்பட்டி போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து இறந்த சடலம் மீட்கப்பட்டது. மேலும் போலீசார் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. வாக்கு சேகரிக்கும் குழுவில் உள்ள மண்டல அலுவலர், வாக்கு சேகரிக்கும் அலுவலர், நுண் கண்காணிப்பு அலுவலர் ஒளிப்பதிவாளர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் உள்ளிட்ட குழுவினர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை பெரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.