Dindigul

News April 10, 2024

ரயில்வே பணியை தொடங்க கோரி மனு

image

பழனி வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் அமைச்சர் பெரியசாமி தலைமையில் இன்று முதல்வரை சந்தித்தனர். ரயில்வே மேம்பால பணிகளை தொடங்க வேண்டும், பழனி கொடைக்கானல் ரோப் கார் திட்டம் செயல்படுத்த வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்தனர். வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News April 10, 2024

திண்டுக்கல்: ரயிலில் அடிபட்டு இறக்கும் மயில்கள்

image

திண்டுக்கல்- திருச்சி வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இன்று பெண் மயில் ஒன்று இறந்தது. மயிலின் உடலை வனத்துறையிடம் ரயில்வே காவலர்கள் ஒப்படைத்தனர். தொடர்ந்து திண்டுக்கல் அருகில் ரயிலில் மயில்கள் அடிபட்டு இறப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 10, 2024

அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக கருப்புக்கொடி

image

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் போட்டியிடுகிறார். அவர், தொகுதி முழுமைக்கும் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், அவரை ஊருக்குள் வரக்கூடாது எனக் கூறி இஸ்லாமியர்கள் இன்று கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 10, 2024

திண்டுக்கல்: திலகபாமா அமைச்சர் ஆவது உறுதி

image

பாமக வேட்பாளர் திலகபாமாவிற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத்,  “தேர்தலில் வெற்றி பெற்றால் திலகபாமா நிச்சயம் மத்திய அமைச்சர் ஆவது உறுதி; இதனால் அவரை தோற்கடித்தே தீர வேண்டும் எனக் திமுகவும் அதிமுகவும் திட்டமிட்டு வருகிறது” என தெரிவித்தார். 

News April 10, 2024

வேட்பாளர்கள் சின்னம் பொருத்தும் பணி

image

பாராளுமன்றத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலையில் திண்டுக்கல் மேற்கு தாசில்தார் வில்சன் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.

News April 10, 2024

திண்டுக்கல் அருகே பெண்கள் ஆர்ப்பாட்டம்

image

திண்டுக்கல் பைபாஸ் பகுதியில் உள்ள தரகு மண்டி வர்த்தக சங்க வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் வெங்காய பேட்டையில் இன்று சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் நிலையில் தரம் பிரித்தல் வேலைக்கு வரவேண்டாம் என்று நிர்வாகிகள் கூறியதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News April 10, 2024

இரு மடங்கு விலை உயர்ந்த பூக்கள்

image

கோடை வெயில் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு வரும் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. வரத்து குறைந்ததாலும் பண்டிகைக் காலம் என்பதாலும் பூக்களின் தேவை அதிகளவில் இருந்ததால் பூக்கள் விலை 2 மடங்கு உயர்ந்து விற்பனையானது. 1 கிலோ ரோஸ் ரூ.140, சம்பங்கி ரூ.150, செண்டுமல்லி ரூ.80, கோழி கொண்டை ரூ.70,  வாடாமல்லி ரூ.50, மல்லிகை ரூ.600, கனகாம்பரம் ரூ.600, முல்லை ரூ.600, ஜாதி பூ ரூ.500க்கு விற்பனையானது.

News April 10, 2024

வேளாண்பணி அனுபவ திட்ட மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு

image

நத்தம் அருகேயுள்ள ஆவிச்சிபட்டியில் பெரியகுளம் தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களின் கிராமப்புற வேளாண் பணி அனுபவத்திட்டத்தின் கீழ் வாக்காளர் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தியும் ஜனநாயகக் கடமையை வாக்களித்து நிலைநாட்டிடவும் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

News April 9, 2024

திண்டுக்கல் மறை மாவட்ட ஆயருடன் சந்திப்பு

image

திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமியை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாக்கு சேகரித்தனர். எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்கிற்கு , தங்களுடைய முழு ஆதரவையும் இரட்டை இலை சின்னத்துக்கு தருமாறு கேட்டுக்கொண்டனர்.

News April 9, 2024

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு

image

 திண்டுக்கல் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான  பூங்கொடி, இன்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!