India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று பூச்செரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பாச்சலூர் பரப்பலாறு அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதால் காட்டு விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகிறது. யானைகள் அதிக அளவில் தண்ணீர் தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் கொடக்கானல் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கோபால்பட்டி, வேம்பார்பட்டி, கணவாய்பட்டி, மலைப்பட்டி போன்ற இடங்களில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மாம்பலம் சீசன் களைகட்டுவது வழக்கம். மாம்பலம் இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு வெயில் தாக்கம் அதிகம் இருந்ததாலும் , மழையின் அளவு குறைந்தாலும் மா பூக்கள் காய்ந்து விட்டது. இதனால் மாங்காய் விளைச்சலும் குறைந்து விட்டது.
மத நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் பழனி, நெய்க்காரப்பட்டி, பெரியகலையம்புத்தூர் ஸ்ரீ ஹைகோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு உட்பட்ட ஊர் பொதுமக்கள் ரமலான் வாழ்த்து கூறி பேனர் வைத்துள்ளனர். அதில், “மதத்தால் இணைந்த மனிதர்கள் அல்ல நாங்கள்; மனதால் இணைந்த மனிதர்கள்; எங்களின் ரத்த உறவுகளுக்கு புனித ரமலான் மற்றும் ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளது.
பழனி அடுத்த ஆயக்குடியில் காயிதே மில்லத் சிறுபான்மையினர் சமூக நல அறக்கட்டளை சார்பாக ரமலான் பண்டிகையை முன்னிட்டு நிர்வாக இயக்குனர் அஜ்மத் அலி தலைமையில் அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து அறக்கட்டளை சார்பாக பொதுமக்களுக்கு ரமலான் பண்டிகை முன்னிட்டு பிரியாணி வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் காயிதே மில்லத் அறக்கட்டளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சியில் உள்ள கருத்தலைக்கம்பட்டி சத்திர கண்மாய் மற்றும் சேத்தூர் ஊராட்சியில் பிடாரம்குளத்தில் மீன்பிடித் திருவிழா இன்று நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதி மக்கள் மூங்கில் கூடைகளை பயன்படுத்தி போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர். கட்லா, கெளுத்தி, கெண்டை, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கியது. கிடைத்த மீன்களை மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளான 18 ஆம் தேதி மற்றும் வாக்குப்பதிவு நாளான 19 ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் தேர்தல் சம்பந்தமான விளம்பரங்களை வெளியிட மாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்பு குழுவிடம் முறையான முன் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு நாள்தோறும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். 70% காய்கறிகள் கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகை என்பதால் கேரள வியாபாரிகள் சந்தைக்கு அதிகம் வராததால் காய்கறி விலை சரிந்தது. கிலோ 25 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி 18 ரூபாய்க்கும், கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் 75 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்பட்டது.
நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சி ஒடுகம்பட்டியில் கலியபெருமாள் கோயிலில் பங்குனி பொங்கல் விழா நடந்தது. இதில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து பாரம்பரிய தேவராட்டம் ஆடியும், புலி வேஷம் போட்டு வேட்டையாடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் கும்மி அடித்தல், மாறு வேஷம் அணிதல், கோலாட்டம், மஞ்சள் நீர் ஊற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
Sorry, no posts matched your criteria.