India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் : சிறுமலை தென்மலையை சேர்ந்த கூலித்தொழிலாளியான லட்சுமணன் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் லட்சுமணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 20.03.2025-ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு நேராந்து பணியை நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
’திருப்பதிக்கே லட்டா? பழனிக்கே பஞ்சாமிர்தமா? போன்ற வசனங்களை நம் வாழ்நாளில் பலமுறை கடந்து வந்திருப்போம். சில ஆண்டுகளுக்கு முன்பு பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவி சார் குறியீடு வழங்கப்பட்டது. இந்தக் குறியீடைப் பெற்ற முதல் கோயில் பிரசாதமும் நம் பஞ்சாமிர்தம் தான். ருசி மிக்க பிரசாதமாக மட்டுமில்லாது சித்த முறைப் படி நவபாஷாணத்தால் ஆன பழனியாண்டவர் சிலை தொட்டு வருவதால் இது மருந்தாகவும் நம்பப்படுகிறது.
பழனியில் உள்ள பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்காலம் சம்பளமாக ரூ.15,700 முதல் 58,500 வரை வழங்கப்படும். நாளை கடைசி நாளாகும். <
ரயில்வே தோ்வு வாரியம் சாா்பில் ‘லோக்கோ பைலட்’ பணியிடங்களுக்கான தேர்வுக்கான மையத்தை தெலங்கானாவில் அமைத்து, 20 நிமிடங்களுக்கு முன்பாக தேர்வை ரத்து செய்து தமிழகத் தேர்வர்களை அலைக்கழித்த ரயில்வே அமைச்சகம் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் இரா.சச்சிதானந்தம் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திண்டுக்கல் அரண்மனைக்குளம் பகுதியைச் சோ்ந்தவர் உமா மகேஸ்வரி (38). கணவா் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். கணவரை பார்ப்பதற்காக சென்னை சென்ற உமாமகேஸ்வரி, சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயிலில் திண்டுக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டார். உமாமகேஸ்வரி தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது பையில் வைத்திருந்த 4 பவுன் சங்கிலி திருடப்பட்டதாக புகாரில் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள District Health Society (DHS) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். * Medical Officer* Staff Nurse* Health Inspector (Gr -II)* Hospital Workerகாலிப்பணியிடங்கள்: 4பணியிடம்: திண்டுக்கல் மாவட்டம்
குஜிலியம்பாறை கருங்கல் சின்னத்தம்பிப்பட்டியைச் சோ்ந்தவர் சரவணன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி போதும்பொண்ணு (35). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாளையம் கடை வீதிக்கு நேற்று வந்த, போதும்பொண்ணு, மீண்டும் வீட்டுக்குச் செல்வதற்காக அரவக்குறிச்சி பிரிவுச் சாலையில் சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நாமக்கல்லைச் சேர்ந்த செல்வமணி(47) என்ற பக்தர் உயிரிழந்தார். சபரிமலைக்கு மாலை அணிந்து சாமி தரிசனம் முடித்துவிட்டு, பழனி கோயிலில் சாமிதரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்த பொழுது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியிலேயே உயிரிழந்தார்.
உலகப் புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டு முதலில் தயாரிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வார்கள் சொல்வது திப்பு சுல்தான் காலகட்டத்தில் தான். ஆனால், 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திண்டுக்கல் மலைக் கோட்டையில் உள்ள பூட்டு தான் முதல் பூட்டு என ஊர் மக்கள் பலர் நம்புகின்றனர். நூற்றாண்டுகளாய் நவீனத்தன்மையுடன் தயாரிக்கப்பட்டு வரும் இந்த பூட்டுகளின் உண்மை வரலாறு, எதிர்காலம் போன்ற சாவிகள் காலத்திடமே உள்ளது.
Sorry, no posts matched your criteria.