India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், திண்டுக்கல், சிவகங்கை, ராம்நாடு, நாமக்கல், நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், சேலம், கரூர், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை மற்றும் நெல்லை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, மல்லனம்பட்டி அருகே பூ விவசாயிகள் ராசு, காசிராஜன் ஆகிய இருவரும் இன்று இருசக்கர வாகனத்தில் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு பூ கொண்டு சென்றனர். அப்போது மதுரையை சேர்ந்த முகமது பைசல் என்பவர் ஓட்டி வந்த கார் இருசக்கரம் மீது மோதியதில் பூ விவசாயிகள் ராசு, காசிராஜன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து நிலக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி சட்டம் 1981 இன் கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், ஏப்.21 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி மற்றும் மே. 1ஆம் தேதி மூடப்படும் என திண்டுக்கல் கலெக்டர் அறிவித்துள்ளார்.
மகாவீர் ஜெயந்தி தினம் (21.04.2024) மற்றும் மே தினம் (1.05.2024) ஆகிய நாட்களில் டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை செய்வது ஏதும் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து சிபிஎம்-இன் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் பெரியசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
பழனி முருகன் கோயிலில் ஒரு மாதமாக பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது. மலை மீது உள்ள மண்டபத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி மற்றும் இன்று என இரண்டு கட்டமாக உண்டியலில் எண்ணிக்கை நடந்தது. ரொக்கம் ரூ.5,29 கோடி, தங்கம் 1196 கிராம், வெள்ளி 21,783 கிராம் , சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாட்டு கரன்சிகள் 717 கிடைத்துள்ளது.
பழனி முருகன் கோயிலில் இன்று நடைபெற்ற தங்க தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். மலைமீது மாலையில் நடந்த தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். ரூ.2,000 கட்டணம் செலுத்தி தங்கதேர் இழுக்க முன்பதிவு செய்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திண்டுக்கல், பொன்னிமாந்துறை ஊராட்சியில் திண்டிமாவனம் குழுவினர் உருவாக்கியுள்ள மியாவாக்கி காட்டில் திண்டிமாவனம் தன்னார்வலர்கள் மற்றும் முதல்நிலை வாக்காளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, தலைமையில் இன்று வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர்.
திண்டுக்கல் ஆர்.எஸ்.ரோடு பகுதியில் வேனில் கொண்டுவரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணம் கொண்டுவர பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தங்கத்திற்கான உரிய ஆவணம் உள்ளதா? என வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம் இன்று (12.04.2024) ஆய்வு மேற்கொண்டார். மேலும் உடன் உயர் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என பலர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.