India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் செலவினங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாநில தேர்தல் செலவு கணக்கு சிறப்பு பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில்,
மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான பூங்கொடி மற்றும் தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர் ஜரோன்தே விஷால் தஷ்ரத் ஆகியோர் முன்னிலையில் (ஏப்ரல்-15) இன்று நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ள முன்னாள் படைவீரர்கள் சீலப்பாடி(திருச்சி சாலையில் அமைந்துள்ள ) ஆயுதப்படை மைதானத்தில் தங்களது அடையாள அட்டை மற்றும் படை விலகல் சான்றுடன் ஏப்ரல் 17ஆம் தேதி காலை 9 மணிக்கு நேரில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆட்சியர் பூங்கொடி வெளியிட்டார்.
பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து திண்டுக்கல் தொகுதியில் பிரச்சாரம் செய்ய அவரது கட்சியைச் சேர்ந்த நிறுவனத் தலைவர் ராமதாஸ் மாநில தலைவர் அன்புமணி கவுரவத் தலைவர் கோ . க. மணி உள்ளிட்ட யாரும் இதுவரை வரவில்லை. பிரச்சாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், திலகபாமா தனித்து விடப்பட்டதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு மகிளா நீதிமன்றத்தில் உள்ள 2-வது மாடியில்
இருந்து விசாரணைக்காக வந்த கைதி திருமூர்த்தி என்பவர் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருமூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செங்குளம் பிரிவு அருகே இன்று ஆட்டோவும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவர் நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் துறையினா், ஊா்க் காவல் படையினா் உள்பட 2,679 பேருக்கு தபால் வாக்குரிமை அளிக்கப்பட்டது. இந்த 2,679 போ் வாக்குப் பதிவு நாளன்று வெவ்வேறு சட்டப் பேரவைத் தொகுதிகளில் பணியமா்த்தப்படுவார்கள் என்பதால் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நுண்பாா்வையாளா்களும் தங்களது தபால் வாக்குகளை நேற்று பதிவு செய்தனா். இந்தப் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 3மணி நேரத்தில் (மாலை 7மணி வரை) திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு மல்வாா்பட்டி சிக்கையகவுண்டனூரைச் சோ்ந்தவா் வெ. வடிவேல் (33). இவர் வேடசந்தூா் பகுதியிலுள்ள தனியாா் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறாா். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வேடசந்தூரிலிருந்து தாடிக்கொம்பு நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது இரு சக்கர வாகனத்தின் மீது அவ்வழியாக வந்த வேன் மோதியது.இதில் வேனில் பயணித்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பணியாற்ற உள்ள வெளி மாவட்டங்களைச் சோ்ந்த தோ்தல் அதிகாரிகள், ஆசிரியா்கள் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்ய ஒட்டன்சத்திரம் தனியாா் பொறியியல் கல்லூரியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. இதில் தோ்தல் அதிகாரிகள்,ஆசிரியா்கள் தங்களது தபால் வாக்குகளை நேற்று பதிவு செய்தனர்.
Sorry, no posts matched your criteria.