Dindigul

News April 17, 2024

திண்டுக்கல் எஸ்.பி. முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மாவட்ட காவல்துறையினருடன் கேரளா போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட்ட 4000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் பொதுமக்கள் தேர்தல் அவசர புகார் குறித்து 8525852636 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் குறித்து 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

சிம்ம வாகனத்தில் வீதி உலா

image

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு இலட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 2024 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவின் 2 ஆம் நாளான நேற்று சுவாமி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

News April 16, 2024

சித்திரை திருவிழா முகூர்த்தக்கால்

image

பழனி ரெணகாளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சாமி சாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றன. ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சித்திரை திருவிழா நடைபெற உள்ளது.

News April 16, 2024

திண்டுக்கல்: 18.77 லட்சம் வாக்காளர்கள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 18,77,414 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யவுள்ளனர். மாவட்டத்தில் பாராளுமன்ற பொது தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மற்றும் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள 11 ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு வாக்குப்பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பூங்கொடி தெரிவித்துள்ளார்.

News April 16, 2024

திண்டுக்கல்: ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சமாக உயரும்

image

நத்தம் அருகே உள்ள சிறுகுடியில் முகமது முபாரக் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “இந்தியாவில் 10 ஆண்டுகள் ஆண்ட பாஜக, நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஒரு சவரன் நகை ஒரு லட்சமாக உயர வாய்ப்புள்ளது” என கூறினார்.

News April 16, 2024

விவசாயிகளைச் சந்தித்து வாக்கு சேகரிப்பு

image

பச்சளநாயக்கன்பட்டி கிராமத்தில் பாமக வேட்பாளர் திலகபாமா இன்று விவசாயிகளை சந்தித்தார். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. விளை பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வெற்றி பெற்றால் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக கூறி வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

News April 16, 2024

கல்லூரி மாணவர்களுக்கு வடை

image

பழனியில் கல்லூரி மாணவர்களுக்கு வடை கொடுத்து திமுக மாணவர் அணியினர் இன்று பிரச்சாரம் மேற்கொண்டனர். மோடி வாயால் வடை சுட்டு 10 ஆண்டு காலம் ஆட்சி நடத்தினார். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது எனக் கூறி இந்தியா கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். மாணவரணி நிர்வாகிகள் பிரேம், சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

News April 16, 2024

திண்டுக்கல் அருகே அரிவாள் வெட்டு

image

திண்டுக்கல் நத்தம்ரோடு பாலமரத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் பால் வியாபாரி மூர்த்தி (32). இவரை நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த மூர்த்தி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 16, 2024

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 767 புகாா்கள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 767 புகாா்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. அதில் பணப் பரிவர்த்தணை தொடர்பாக 7,வாக்காளர் பட்டியல் தொடர்பாக 692, தேர்தல் விதி மீறல் தொடர்பாக 61,இதர புகார்கள் 7 என மொத்தம் 767 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News April 16, 2024

வேடசந்தூர்: பேருந்து நிலையத்தில் முதியவர் மரணம்

image

வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் மற்றும் கிராம அலுவலர் இறந்தவரின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!