India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீஸ் பதவிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 9 ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் திண்டுக்கல் சுபதர்ஷினி(30) 83 ஆவது இடம்,ஆசிக்உசேன்(25) 845 ஆவது இடம், ஓவியா 796 ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மக்களவை பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, அனைத்து நிலை பணியாளர்கள் வாக்களிக்கும் பொருட்டு வாக்குப் பதிவு நாளான ஏப்.19 அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அன்று வாக்களிப்பதற்கு ஏதுவாக, நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்காதபட்சத்தில், அது தொடர்பான புகார்களை 0451-2461429 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மதனபுரம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்ற கூலி தொழிலாளியின் மகள் ஓவியா. இவர் சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான தேர்வில் தேசிய அளவில் 796 ஆவது இடம் பிடித்துள்ளார். மூன்று முறை தேர்வு எழுதிய நிலையில் 4 ஆவது முறையாக தற்போது எழுதிய தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெற்றோர்கள், உறவினர்கள் பலர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏப்.19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களான மோயர்பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணாகுகை, பில்லர் ராக் ஆகிய பகுதிகள் பிற்பகல் 12.00 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மூடப்படும்; மேலும் பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி இல்லை என கொடைக்கானல் வனத்துறை அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வந்த பரப்புரை இன்று(17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ஒரு நாளுக்கு முன்னதாக இன்றுடன் பரப்புரை நிறைவடைந்திருக்கிறது. இதனையடுத்து பழனியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி சென்னை செல்லும் பயணிகளின் வசதிக்காக தென்னக ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன்படி, கோவையிலிருந்து ஏப்.19,21 ஆகிய தேதியில் இரவு 8.40 மணிக்கு கிளம்பி பழனி வழியே, திருச்சி, தஞ்சை, கடலூர் வழியாக சென்னை எக்மோருக்கு காலை 10.05 மணிக்கு செல்லும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு இன்று(ஏப்.17), இந்து மக்கள் எழுச்சி பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வலியுறுத்தி வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அங்கிருந்த காவலர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
மக்களவை பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 126ன் கீழ் இன்று(ஏப்.17) மாலை 6.00 மணி முதல், வாக்குப்பதிவு முடிவடையும் 19ம் தேதி மாலை 6.00 வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரத்திற்கு முந்தைய கட்டுப்பாடுகளை கடைப்பிடித்திட வேண்டும்; இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பூங்கொடி அறிவுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று 17.04.2024 மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பூங்கொடி தலைமையில் கணினி வாயிலாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி மத்திய தேர்தல் பொது பார்வையாளர் பிரபுலிங் கவாலி கட்டி முன்னிலையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள அகதிகள் முகாமில் குடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக நாகராஜ் என்பவர், ஆனந்தன் என்பவரின் கழுத்தை நெறித்து இன்று கொலை செய்தார். வத்தலகுண்டு போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகராஜ் திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
Sorry, no posts matched your criteria.