India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் ஆணையம் அறிவிப்பின் கீழ் இன்று 19.04.2024- மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் திடீரென போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பானது. சவேரியார் பாளையம், மேட்டுப்பட்டி, குடை பாறைப்பட்டி போன்ற இடங்களில் பதட்டமான வாக்குச்சாவடிகளும் உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனா் என தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி கவட்டக்கரை தெரு, மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பூங்கொடி தனது வாக்கை வரிசையில் நின்று பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் வாக்குப்பதிவு முறையாக நடைபெறுகிறதா எனவும் ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தயம் சி.எஸ்.ஐ துவக்கப்பள்ளியில் இன்று உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி அவரது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்கு பதிவு செய்தார்.
பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு சாவடி மையத்தில் பதிவு இயந்திரம் செயல்படாததால் காலை 7 மணிக்கு வாக்கு பதிவு துவங்க முடியவில்லை. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கப்பட்டது. காலையில் ஆர்வமாக வாக்கு செலுத்த வந்த வாக்காளர்கள் காத்திருந்து பின்னர் வாக்கு செலுத்தினர்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் ஆர்.எம்.காலனி ஜான்பால் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் உள்ள பெண்கள் வாக்குச்சாவடியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இன்று (18.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் 6சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. தொகுதியில் 1812 வாக்குப்பதிவு மையங்கள், 16,07,051 வாக்காளர்கள், 7,411 வாக்குச்சாவடிகள், 137 பதட்டமான வாக்குச்சாவடிகள், 39 மிகப் பதட்டமான வாக்குச்சாவடிகள், 1,812 வாக்குப்பதிவு இயந்திரங்கள்
1,812 கட்டுப்பாட்டு கருவிகள்,
1,812 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரம் உள்ளன
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த <
பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இன்று (18.04.2024) ஆய்வு மேற்கொண்டார்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும்.
பழநியில் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைந்த போதிலும் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடிகள் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பழநி அருகே மேல்கரைப் பட்டியைச் சேர்ந்தவர்கள் இன்று தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர். பாதயாத்திரையாக வந்தவர்கள் மேல்கரைப்பட்டி குமரப்ப சுவாமி கோயில் காளையை மலர்களால் அலங்கரித்து கிரிவீதி வலம் வந்தனர்.
Sorry, no posts matched your criteria.