Dindigul

News April 19, 2024

திண்டுக்கல்: சர்கார் பட பாணியில் கள்ள ஓட்டு?

image

பழனி அருகே ஆயக்குடி 44 வது வாக்குச்சாவடியில் விஜய் ரசிகர் மன்றம் ( தமிழக வெற்றி கழகம்) நகர துணை தலைவர் சரவணன் வாக்கு செலுத்த வந்தபோது சரவணன் உடைய வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டதாக கூறியதால் அதிர்ச்சி அடைந்தார். இதனால் வாக்களிக்க முடியாமல் போன இளைஞருக்கு  ஆதரவாக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News April 19, 2024

திண்டுக்கல்: குடும்பத்துடன் வந்த முன்னாள் அமைச்சர்

image

திண்டுக்கல் அரசு பள்ளியில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது குடும்பத்துடன் வாக்கு செலுத்த வருகை தந்தார். காலையில் வாக்கு சாவடிக்கு மனைவி மற்றும் மகன்களுடன் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் வருகை தந்தார். பின்னர் மக்களுடன் மக்களாக நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தி விட்டுச் சென்றனர்.

News April 19, 2024

திண்டுக்கல்: கருப்பு கொடிகட்டி தேர்தல் புறக்கணிப்பு

image

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு சின்ன அயன்குளம் பகுதியில் குடிநீர், சாக்கடை கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இதனால், வாக்களிக்க செல்ல போவதில்லை எனக்கூறி கருப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 10 வார்டு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 19, 2024

திண்டுக்கல்: 102 வயதில் வாக்களித்த மூதாட்டி

image

இன்று தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம் பட்டியில் 102 வயது மூதாட்டி சின்னம்மாள், காலையிலேயே வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார். முதியோர்கள் வாக்களிக்க அந்த மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

News April 19, 2024

வாக்கு செலுத்த வந்த இளைஞர்களுக்கு அதிர்ச்சி.

image

புது ஆயக்குடி 13 வது வார்டு 44 வது வாக்குச்சாவடியில் சரவணகுமார் என்பவர் வாக்கு செலுத்த சென்றுள்ளார். ஏற்கனவே சரவணகுமார் வாக்கு செலுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனது வாக்கினை வேறு யாரோ செலுத்தியதை அறிந்து சரவணகுமார் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தான் வாக்கு செலுத்த முடியாதது குறித்து தேர்தல் அதிகாரியிடம் சரவணகுமார் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News April 19, 2024

வாக்கு பதிவு செய்து படம் எடுத்தால் நடவடிக்கை.

image

பழனி ஆயக்குடியில் இளைஞர்கள் சிலர் வாக்கு பதிவு செய்து செல்போனில் படம் எடுத்துள்ளனர். தாங்கள் யாருக்கு வாக்கு பதிவு செய்தோம் என்பதை சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர் . வாக்குப்பதிவை செல்போனில் படம் எடுப்பது மற்றும் சமூக வலைதளத்தில் பதிவு செய்வது சட்டப்படி குற்றமாகும் .இந்நிலையில் காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அலுவலர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

News April 19, 2024

பழனி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம்.

image

பழனி பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்வதற்காக ஏராளமான பயணிகள் இன்று வந்தனர். போதிய பேருந்து வசதி இல்லாததால் நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். மதுரை, கோவை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல அதிக அளவில் பயணிகள் வருகை தந்தனர்.போதிய பேருந்து வசதி இல்லாததால் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

News April 19, 2024

திண்டுக்கல்லில் ஜனநாயக கடமையை செய்த மூதாட்டி

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற வரும் நிலையில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமலிங்கம் பட்டியில் இன்று (19.04.2025-) 102 வயதான சின்னம்மாள் என்பவர் வயதான காலத்திலும் கூன் விழுந்த நிலையிலும் ஜனநாயக கடமையாற்றுவதற்காக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார். இவரது ஜனநாயக கடமையை பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

News April 19, 2024

அமைச்சர் குடும்பத்துடன் வாக்களிப்பு

image

கள்ளிமந்தத்தில் அரசு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்துக்கு உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தனது குடும்பத்துடன் வாக்கு செலுத்த வருகை தந்தார். காலையில் வாக்கு சாவடிக்கு மனைவி மற்றும் மகள்களுடன் அமைச்சர் சக்கரபாணி வருகை தந்தார். அமைச்சர் குடும்பத்தினர் வரிசையில் நின்று வாக்கு செலுத்தி விட்டுச் சென்றனர்.

News April 19, 2024

வாக்குச்சாவடிக்கு செல்ல இலவச வாகன வசதி

image

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், செயலி மூலமாகவும், தோ்தல் மைய உதவி எண் 1950, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை எண் 18005994785 மூலமாகவும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியர் பூங்கொடி தெரிவித்தாா்.

error: Content is protected !!