Dindigul

News April 21, 2024

திண்டுக்கல் வாக்குப்பதிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின் கீழ் நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024- மாநில தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையும், மத்திய தேர்தல் ஒரு அறிக்கையும் வெளியிட்டது. இதனால் எத்தனை சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றது. என அரசியல் பிரமுகர், பொது மக்கள் குழப்பம் அடைந்த நிலையில் நேற்று நள்ளிரவு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 71.14% வாக்கு பதிவானது என அதிகார பூர்வமாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

News April 20, 2024

ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்கள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் திமுகவினரால் தாக்கப்பட்ட அதிமுகவினர் ஒன்பதுக்கும்  மேற்பட்டோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் விசுவநாதன் நேரில் பார்த்து ஆறுதல் கூறினர். மேலும் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

News April 20, 2024

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானம்

image

வத்தலகுண்டு நகரை சேர்ந்த முத்து கிருஷ்ணன் இன்று இயற்கை எய்தினார். அவரது சகோதரரின் ஒப்புதலுடன் இன்று திண்டுக்கல் லயன்ஸ் மெஜஸ்டிக் சங்க தலைவர் கே. ஆர்.கேவின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மூன்றாவது முறையாக முழு உடலையும், 28-வது முறையாக கண்தானம் வழங்கப்பட்டது.

News April 20, 2024

கொடைக்கானல்: காட்டு யானைகள் முகாம்

image

கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பை மலைக்கிராமத்தில் முகாமிட 4க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மயிலம்மா என்ற மூதாட்டியின் விவசாய தோட்டப்பகுதியில் புகுந்து அங்கு பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த பீன்ஸ் போன்றவற்றை சேதப்படுத்தியது. மேலும் வனத்துறையினர் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும், யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 20, 2024

திண்டுக்கல்: பேரூராட்சி தலைவர் விரட்டியடிப்பு

image

திண்டுக்கல் மாவட்டம், அகரம் பேரூராட்சிக்குட்பட்ட கருங்கல்பட்டியில் இன்று தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுகவை சேர்ந்த குழந்தை, ராஜமாணிக்கம், சவரிமுத்து ஞானமணி, ஆகிய மூன்று பேரை அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகுமார் கும்பலுடன் வீட்டுக்குள் புகுந்து தாக்கியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த மக்கள் பேரூராட்சி தலைவரை ஓட ஓட விரட்டியடித்தனர். 

News April 20, 2024

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இறைச்சி கடை இயங்காது

image

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் இன்று 20.04.2024- வெளியிட்ட செய்திகுறிப்பில் நாளை 21.04.2024-மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மாநகராட்சி பகுதியில் இறைச்சிக்கடை திறந்து விற்பனை செய்யக்கூடாது எனவும், ஆடு, மாடு, பன்றி போன்ற எந்த இறைச்சி கடையும் இயங்கினால் இறைச்சியை பறிமுதல் செய்து அபதாரம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதே போல் டாஸ்மாக் கடையும் இயங்காது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 20, 2024

திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தல் இ. வி. எம் இயந்திரம் வந்தது

image

திண்டுக்கல் மக்களவை தேர்தல் நேற்று முடிவடைந்தது.இன்று. 20.04.2024- காலை ஒவ்வொரு சட்ட மன்ற தொகுதியில் இருந்தும் (reser unit )மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் இயந்திரம் வைப்பறைக்கு தேர்தல் அலுவலரும், வட்டாச்சியர் சரவணன் முன்னிலையில் வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News April 20, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குபதிவு நிறைவு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 6 மணியுடன் நிறைவு பெற்றது. நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கிய தேர்தல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று 70%தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். இதில் சில பகுதிகளில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டாலும், பெரும்பாலன இடங்களில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

News April 19, 2024

திண்டுக்கல்: பாதுகாப்பு பணி தீவிரம்

image

திண்டுக்கல்லில் இன்று மாலையுடன் வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சத்திரம் அருகே உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட உள்ளது. இதற்காக இங்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இரவிலும் பகல் போல் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.

News April 19, 2024

முதல் தலைமுறை வாக்காளர்கள்

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று (ஏப்ரல்-19) திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியில் உள்ள ஜான்பால் பள்ளியின் வாக்குச்சாவடி மையத்தில் தங்களது முதல் வாக்கை பதிவு செய்ய ஆர்வமுடன் பெண்கள் வந்திருந்தனர். வரிசையில் நின்று தங்களது வாக்கை செலுத்தினர். பின்னர் அனைவரும் ஒன்றாக நின்று வாக்காளர் அட்டையை கையில் வைத்தபடி செல்ஃபி எடுத்து கொண்டனர்.

error: Content is protected !!