Dindigul

News April 24, 2024

திண்டுக்கல்: 10 அடி நீள கருஞ்சாரை

image

பழனி அடிவாரத்தில் சேகர் என்பவர் வீட்டில் பாம்பு ஒன்று புகுந்தது. வீட்டில் இருந்தவர்கள் பயந்து வெளியே ஓடினர். உடனடியாக பாம்பு பிடிக்கும் நாகராஜ் என்பவரை தொடர்பு கொண்டுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற நாகராஜ் வீட்டிற்குள் இருந்த 10 அடி நீளம் கொண்ட கருஞ்சாரை பாம்பை உயிருடன் பிடித்தார். பின்னர்,  வனத்துறை உதவியுடன் அடர்ந்த காட்டுப்பகுதியில் விடப்பட்டது. 

News April 24, 2024

திண்டுக்கல்: கோர விபத்து: பலி

image

ஒட்டன்சத்திரம் அருகே சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது மினி லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் தும்மிச்சாம்பட்டி புதூரரை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் உயிரிழந்தார். 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் ஒட்டன்சத்திரம், பழனி தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 24, 2024

சுகாதாரமற்ற நிலையில் பேருந்து நிலையம்

image

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை புரிகின்றனர். பேருந்து நிலையத்தில் குப்பைகள் போடும் இடமானது பேருந்து நிலைய நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடம் சுகாதரமற்ற நிலையில் உள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். 

News April 24, 2024

திண்டுக்கல் : செயல்பாட்டிற்கு வந்தது மஞ்சள் பை இயந்திரம்!

image

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம் சார்பில் துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் பொருத்தபட்டுள்ளது இதில் 10 ரூபாய் நாணயம் செலுத்தி மஞ்சள் பைகளை பொதுமக்கள் பெற முடியும். இந்த இயந்திரமானது சமீபத்தில் சில நாட்களாக செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் இயந்திரம் பழுது நீக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.

News April 24, 2024

பழனி மின்சாரத்துறைக்கு குவியும் கண்டனங்கள்

image

பழனி அடுத்த பாப்பம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து இரவு நேரத்தில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் மிகக் குறைவாக வழங்கப்படுவதால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். மின்சார வாரிய அலட்சியப் போக்கால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக குற்றம் சாட்சி வருகின்றனர்..

News April 24, 2024

தாய்மாமனுக்கு ஸ்கெட்ச் போட்ட கணவன் 

image

பழனி அருகே பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி மீனா. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  மீனாவின் தாய் மாமனான ஜெகதீஸ்வரன் வீட்டில் மீனா வசித்து வருவதால், ராம்குமார் கோபத்தில் இருந்துள்ளார். நேற்று காலை ஜெகதீஸ்வரனை வழிமறித்த ராம்குமார் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து வெட்டியதில் பலத்த காயமடைந்தார்.

News April 24, 2024

திண்டுக்கல்:  1500ஐ தொட்ட மல்லிகை 

image

திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று (ஏப்ரல்.23) சித்ரா பௌர்ணமி முன்னிட்டும், கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளால் பூக்கள் வரத்து குறைவானதால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய் 1500 வரை விற்பனையாகிறது. மேலும் மாலைக்கு கட்டும் பூவான சம்பங்கி, செவ்வந்தி போன்ற பூக்கள் ரூபாய் 250 வரை விற்பனை ஆகிறது.

News April 24, 2024

வட்டக்கானலில்  பார்க்கிங் வசதி தேவை

image

கொடைக்கானலில் கடைக்கோடியில் உள்ளது வட்டக்கானல் அருவி. இந்த அருவி அருகே டால்பின் நோஸ் பகுதியும் உள்ளது. இதில் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. வட்டக்கானல் பகுதியில் பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாத சூழலில் ரோட்டோரமே நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News April 24, 2024

ரூ.36.16 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

image

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.36.16 லட்சத்துக்கு, பழனி கோயில் சாா்பில் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. இதில் ஒரு மூட்டை சா்க்கரை ரூ.2,510 முதல் ரூ.2,600 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் ரூ.36.16 லட்சத்திற்கு 20 கிலோ கரும்பு சா்க்கரை பழனி கோயில் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News April 24, 2024

பழனி முருகன் கோயிலில் அமைச்சர் பிடிஆர்

image

பழனி முருகன் கோவிலுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் அவ்வப்போது வந்து தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில்  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பழனி கோயிலுக்கு வருகை தந்து முருக பெருமானை தரிசனம் செய்தார். முன்னதாக அடிவாரத்தில் ரோப் கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

error: Content is protected !!