India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை முருகன் DSP, PEW, திண்டுக்கல் தலைமையில் காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில்
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெற http://socialjustice.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்
பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் 23.10.2024 அன்று செயல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் 16.10.2024 அன்று மனுக்கள் பெறப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அரசு உதவிகளை இத்திட்டத்தின் கீழ் மனு அளித்து பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 172 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவுறுத்தினார். உடன் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.
மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் கால்நடை மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்வதற்காக பழனி முருகன் கோவிலுக்கு இன்று வந்தார். அடிவாரத்தில் இருந்து மின் இழுவை ரயில் வழியாக மலைக்கோவில் சென்ற அவர் உச்சிக்கால பூஜையில் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தார்.
திண்டுக்கல் மாவட்ட பொதுமக்கள் மழை பாதிப்பு மற்றும் மழை தொடர்பான உதவிகள் குறித்து, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார். மேலும், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தயார் நிலையில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் அரக்கோணத்தில் இருந்து தயார் நிலையில் உள்ளனர்.
வேடசந்தூா் அருகே உள்ள பூத்தாம்பட்டியைச் சோ்ந்த அருண் பாலன் என்பவர் குஜிலியம்பாறையை சோ்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகள்களுக்கு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சமும், சகாயராஜ் என்பவரிடம் ரூ.8 லட்சமும் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அருண்பாலன் மற்றும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாா், நேற்று அருண்பாலனை கைது செய்தனர். அருண்பாலன் இதுவரை ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், இணையதளத்தில் பல போலியான முதலீடு செயலிகள் (Investment Apps) உள்ளது. அவற்றில் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் எடுக்கலாம் என ஆசையை தூண்டி நம்மிடம் உள்ள பணத்தை பறிக்க வாய்ப்புள்ளது. எனவே, இது தொடர்பான புகார்களுக்கு Cyber Crime Help Line: 1930 Website: www.cybercrime.gov.in தெரிவிக்கலாம்.
நத்தம் அருகே பரளி-தேத்தாம்பட்டியை சேர்ந்த தம்பதியினர் ராமர் (37) – பொன்னம்மாள் (30). நேற்று முன்தினம் பொன்னம்மாள் தனது 1 வயது குழந்தையுடன், வீட்டின் அருகே விறகு அடுப்பு வைத்து சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அதில் இருந்த சுடு தண்ணீர் அருகில் இருந்த குழந்தை மீது கொட்டியது. இதில் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (12.10.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப், தலைமையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.