India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், தரைப்பகுதிகளில் நிலவும் வெப்பத்தை சமாளிக்கவும் சுற்றுலாப்பயணிகளின் வருகை காலை முதலே அதிகரித்துள்ளது. இதனால் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஏரிச்சாலை, கலையரங்கம், மூஞ்சிக்கல், கல்லறை மேடு, அப்சர்வேட்டரி, சென்பகணூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக 100- க்கணக்கான வாகனங்கள் அணி வகுத்து சென்றன.
கொடைக்கானல் ஏரிக்கு அருகில் உள்ளது கோக்கர்ஸ் வாக். ஒரு கிலோமீட்டர் நடைபாதையே கோக்கர்ஸ்வாக், இருப்பினும் மற்ற நடைபாதைவிட இது சிறப்பாக விளங்குகிறது. இந்த நடைபாதை 1872 இல் லெப்டினன்ட் கோக்கரால் செங்குத்தான மலைச்சரிவில் கட்டப்பட்டது. இங்கு உள்ளூர் வாசிகளின் மலையில் உற்பத்தியான பொருட்களும், பழங்களும் கிடைக்கின்றன. இங்கு வாடகைக்கு கிடைக்கும் சைக்கிள்களில் சுற்றி பார்த்து இயற்கையின் அழகை அனுபவிக்கலாம்.
முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில், அதனை திமுக மறுத்துள்ளது. அதேநேரம் ஸ்டாலின் கொடைக்கானல் வர உள்ளார். ஏப்ரல் 29ம் தேதி குடும்பத்துடன் மே 4 வரை தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து கொடைக்கானல் பாம்பார்புரம் தனியார் விடுதியில் ஒருவாரம் தங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் மொட்டணம்பட்டி ரோடு வன்னியர் திடலில் பெண்களுக்கான மாநில அளவிலான கபாடி இன்று (27.4.2024) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெற்ற முதல் நான்கு அணிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். காலிறுதியில் வாய்ப்பினை இழந்த அணிகளுக்கும் ஆறுதல் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தனது குடும்பத்தினருடன் இன்று கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ளார். பாம்பார்புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில் அண்ணாமலை இன்று கொடைக்கானலில் இருந்து தனது சொந்த ஊருக்கு செல்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரத்திற்காக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலில் ஏப்.29 முதல் மே.4 வரை ஓய்வு எடுக்க உள்ளார் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
நிலக்கோட்டை அருகே பொட்டிசெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகுரு(38). இவர் வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வத்தலக்குண்டில் இருந்து கொடைரோடு நோக்கி டூவீலரில் சென்றபோது அவ்வழியாக நடந்து சென்றவர் மீது பாலகுருவின் டூவீலர் மோதியது. இந்த விபத்தில் பாலகுரு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதியது .இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராமகிருஷ்ணன், சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த காமாட்சிபுரம் எல்லப்பட்டியில் ஸ்ரீ கெண்டுகாட்டம்மாள், ஸ்ரீ பொம்மையா சாமி, ஸ்ரீ மாலைக்கோயில், ஸ்ரீ மண்டு கோயில் அமைந்துள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு தொடங்கிய இந்த கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 1000க்கும் மேற்பட்ட பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். பின்னா் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ரயில் நிலையம் அருகே உள்ள செங்குறிச்சி செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக இன்று (27.04.2024) காலை 9.00-மணி முதல், மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும். இது தொரட்பாக அந்த ரயில்வே கேட்டிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.