Dindigul

News April 29, 2024

கோயிலுக்கு வந்தார் சவுந்திரராஜ பெருமாள்

image

சித்ரா பவுர்ணமி திருவிழாவில் நகர்வலம் சென்ற தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு மேல் கள்ளர் வேடம் தரித்து பூப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடந்தது. அன்று இரவு நகர்வலம் வந்தார். நேற்று காலை 9 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார். மதியம் திருமஞ்சன அலங்காரம் நடந்தது. பல்லக்கில் புறப்பட்ட பெருமாள் இரவு தனது இருப்பிடமான தாடிக்கொம்பு கோயில் சன்னதிக்கு வந்தடைந்தார்.

News April 29, 2024

பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி கிடையாது

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களான மோயர்பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணாகுகை, பில்லர்ராக் ஆகிய பகுதிகளில் இன்று (ஏப்.29) வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் சென்று வரலாம். ஆனால் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என வனத்துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

திண்டுக்கல்: சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்

image

கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். இந்நிலையில் ஒரு தனியார் ஹோட்டலில் சாப்பிட சென்ற சுற்றுலா பயணிகள் மீது சமையல் மாஸ்டர் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதையடுத்து அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த மற்ற சுற்றுலா பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கொடைக்கானல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

News April 28, 2024

கூட்டு பாலியல் வழக்கு: 4 பேருக்கு குண்டாஸ்

image

திண்டுக்கல் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலர்களை கட்டிப்போட்டு கத்திமுனையில் 2 இளம் பெண்களை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களது குற்ற சம்பவங்களை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் எஸ்பி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவின் பேரில் 4பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நேற்று மதுரைமத்திய சிறையில் அடைத்தனர்.

News April 28, 2024

நாளை முதல் மே.4 வரை தடை

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா பகுதிக்கு முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு, கொடைக்கானல் பகுதிகளில் 29.04.2024 அன்று முதல் 04.05.2024 வரை ட்ரோன் கேமராக்கள் மற்றும் பலூன்கள் பறக்கதடை விதிப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News April 28, 2024

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

image

திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை அச்சிறுமியின் சித்தப்பா முருகவேல் மற்றும் சிறுமியின் அம்மாவின் 2-வது கணவர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாயார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் இருவரையும் போக்சோ வழக்கின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

News April 27, 2024

பழனியில் ரோப்கார் சேவை நிறுத்தம்

image

பழனியில் மாதந்தோறும் ஒரு முறையும், வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ஒரு மாதம் ரோப் கார் சேவை நிறுத்தப்படும். இந்நிலையில், ரோப்கார் சேவை ஏப்.29ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இயங்காது என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கு தகுந்தார்போல் பக்தர்கள் தங்களது வின்ச் படிப்பாதை அகிய பயணத்திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

News April 27, 2024

திண்டுக்கல்: விரைவில் அன்னதான கூடம்

image

திண்டுக்கல் நாகல் நகர், பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயம். இந்த ஆலயத்தில் பக்தர்கள் அமர்ந்து சாப்பிட அன்னதான கூடம் கட்டிமுடிக்கப்பட்டது. இதில் வருகின்ற மே மாதம் 1ம் தேதி புதன் கிழமை முதல் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அன்னதானம் நடைபெற உள்ளது என்று கோயில் நிர்வாகி முருகன் தெரிவித்துள்ளார்.

News April 27, 2024

திண்டுக்கல்: 18ஆம் நூற்றாண்டு கால செப்பேடு

image

பழனியில் பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தில் எழுதப்பட்ட செம்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சண்முகம் என்பவர் பாதுகாத்து வைத்திருந்த சல்பேட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார். பழனி முருகன் கோவிலுக்கு சிவகங்கை ஆண்ட விஜய ரகுநாத பெரிய உடை பூமி தானம் அளித்துள்ளார். கோயிலில் முருகனுக்கு கால பூஜைகள் தடையின்றி நடைபெற ஆறு ஊர்களை தானமாக வழங்கிய செம்பேடு எழுதியது தெரியவந்துள்ளது.

News April 27, 2024

திண்டுக்கல்: முக்கிய நிர்வாகி கைது

image

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு, கோவிலூரை சேர்ந்தவர் பாலுபாரதி (45). இவர் குஜிலியம்பாறை வட்ட லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆவார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவருக்கும் D.கூடலூரை சேர்ந்த பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டு தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பெண்ணின் 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 

error: Content is protected !!