Dindigul

News April 30, 2024

திண்டுக்கல்:  5 %  ஊக்கத்தொகை

image

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் ஆணையர் ரவிச்சந்திரன் இன்று மாலைக்குள் 48வது வார்டு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் 2024-2025- க்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை கட்டினால் 5 %  ஊக்கத்தொகை அளிக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் ஒரே நேரத்தில் மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

News April 30, 2024

வேடசந்தூர் அருகே போலி ரத்தினக்கல் மோசடி

image

வேடசந்தூரனபாலபட்டியைச் சேர்ந்தவர் சிங்கராஜ். இவர் தன்னிடம் விலை உயர்ந்த ரத்தினங்கள் இருப்பதாக கூறி திருப்பூர் காளியப்பன்னை அய்யலூர் வரவழைத்து ரூ.1.20 லட்சம் பெற்றுக் கொண்டு ரத்தினகல்லை கொடுத்துள்ளார். அது போலி கல் என்பதை தெரிந்த காளியப்பன் பணத்தை திரும்ப பெற்றுள்ளார்.முதல் தவணையாக ரூ.28,000 கொடுத்த நிலையில் மீதி பணத்தை தர மறுத்து விட்டார்.இது குறித்து வடமதுரை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 30, 2024

200 ஆடுகள் தயாராகும் மெகா கறி விருந்து 

image

பழனி அருகே பெரியதுரையான் கருப்பணசாமி கோவிலில் 43 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய 200 ஆடுகள் இன்று பூஜை செய்யப்பட்டு கருப்பணசாமி முன்பு பலி கொடுக்கப்பட்டது. தற்போது ஆயிரம் கிலோ ஆட்டுக்கறியுடன் அன்னதானம் வாங்க உணவு தயாராகி வருகிறது. இன்று காலை 10 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் தூக்கிட்டு தற்கொலை

image

திண்டுக்கல் ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள கள்ளிப்பட்டி பகுதியில் குடும்பப் பிரச்சனை காரணமாக நேற்று தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் உடலை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 29, 2024

திண்டுக்கல் : பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி

image

திண்டுக்கல் மாவட்டம் இரயில் வே ஸ்டேஷன் ரோட்டில் அமைந்துள்ள (old employment office) ல் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சிக்கான அட்மிஷன் இன்று (29.4.2024) நடைபெறுகிறது. இப்பயிற்சியானது 2மாத கால நடைபெறும். இப்பயிற்சி சேர விரும்புவர்கள் தேவையான ஆவணங்களுடன் நேரில் வந்து முன்பதிவு செய்ய வேண்டும். பயிற்சி ஆனது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News April 29, 2024

திண்டுக்கல்: பேருந்துகள் ரத்து

image

பழனி பேருந்து நிலையத்திலிருந்து கொடைக்கானலுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்து இயக்கப்படுகிறது. இன்று முதல்வர் வருகை காரணமாக கொடைக்கானலில் இருந்து பழனி பேருந்து நிலையத்துக்கு பேருந்து வருவதில் கால தாமதம் ஏற்பட்டது. மதிய நேரங்களில் கொடைக்கானலுக்கு செல்லும் பேருந்து ரத்து செய்யப்பட்டது. பேருந்து ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர்.

News April 29, 2024

மணல் கொள்ளையை தடுக்க கோரி மனு

image

ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி, குளம், ஆற்றுப்படுகைகளில் அரசு அனுமதியின்றி நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுக்கக்கோரி இன்று (ஏப்ரல்-29) பாமக சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 29, 2024

திண்டுக்கல்: 2329 காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் 2329 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பம்போல் எதாவது ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதன்படி திண்டுக்கல் மாவட்ட நீதித்துறையில் 55 காலியிடங்கள் உள்ளன. இதில் விண்ணப்பிக்க https.//www.mhc.tn.gov.in என்ற இணைய தளத்தில் மே.27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 29, 2024

வாகங்கள் தடுத்து நிறுத்தம்

image

மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கொடக்கானலுக்கு இன்று முதல்வர் வருவதையொட்டி தேனி மாவட்ட எல்லையான காட்ரோடு பகுதியில் வகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சற்று முன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

News April 29, 2024

கொடைக்கானல் புறப்பட்டார் முதலமைச்சர்

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்.29 முதல் மே.3 வரை 5 நாள் சுற்றுப் பாயணமாக கொடைக்கானலில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுக்க சற்றுமுன் சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரைக்கு புறப்படார். மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானலுக்கு செல்கிறார். அங்கு 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். முதலமைச்சர் வருகையையொட்டி கொடைக்கானலில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!