Dindigul

News May 2, 2024

இ-பாஸ் நெறிமுறைகள் இன்று மாலை வெளியீடு

image

மே. 7 ஆம் தேதி முதல் ஜீன். 30 ஆம் தேதி வரை கொடைக்கானலுக்கு செல்ல இ- பாஸ் வேண்டும் என அறிவிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் அளிக்க தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்களுக்கு அனுமதி, உள்ளூர் வாகனங்களுக்கான நடைமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.

News May 2, 2024

கொடைக்கானலில் தொடரும் காட்டுத் தீ

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை, பூம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காட்டுத்தீ பற்றி எரிந்தது. உள்ளூர் மக்களும், தீயணைப்பு துறையினரும் தீயை தொடர்ந்து அனைத்து வரும் நிலையில் இன்றும் ஏழாவது நாளாக தீ பற்றி எரிந்து வருகிறது. அதிகாலையில் பனிமூட்டம் போல் புகை சூழ்ந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

News May 2, 2024

கோழிப்பண்ணையில் தீ விபத்து

image

திண்டுக்கல் மாவட்டம் கோவிலூரில் நேற்று இரவு கோழிப்பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து வேடசந்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 1, 2024

விளையாட்டு விடுதியில் சேர அழைப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் விபரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7401703504 என்ற கைபேசி எண் வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறந்திடுக

image

பழனி அடிவாரத்தில் உள்ள 8 வார்டுகளுக்கு கோடைகால நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குறைந்து போனது. பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் லாக்கி இருந்து நீர்தேக்கத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என மார்க் கம்யூனிஸ்ட் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News May 1, 2024

மீண்டும் விலை உச்சத்தை தொட்ட வெள்ளைப் பூண்டு

image

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இன்று 01.05.2024- ஒரு கிலோ மலைப்பூண்டு ரூபாய் 350- க்கும், ரசப் பூண்டு கிலோ 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சாலையோரமாக விற்கப்படும் கடைகளில் விலை குறைவாக இருக்கும் என பொதுமக்கள் வரும் வியாபாரிகளிடம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு போன்றவற்றை வாங்குவதுண்டு. ஆனால் இன்று சாலையோர சில்லறை விற்பனை கடையில் கிலோ 200 ரூபாய்க்கு வெள்ளை பூண்டு விற்றதால் மக்கள் அதிர்ச்சி.

News May 1, 2024

தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்து

image

ஐஎன்டியுசி தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள்
தொழிற்சங்கம் சார்பாக திண்டுக்கல் மாநகராட்சி 5 ஆவது பிரிவில் இன்று மே.1 தொழிலாளர் தினம் கொண்டாடபட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் வீ.காளிராஜ், மாவட்ட தலைவர் A.பக்ருதீன் உள்ளிட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினர்.

News May 1, 2024

கொடைக்கானலுக்கு செல்ல தடை

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனச்சரகத்திற்குட்பட்ட பூம்பாறை, மன்னவனூர் பகுதிகளில் காட்டுத்தீ தொடர்வதால், பூம்பாறையில் இருந்து கூக்கல், மன்னவனூர் செல்லும் கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்
உள்ளூர் மக்களுக்கு தடை இல்லை. இந்த தடை இன்று மற்றும் நாளை அமலில் இருக்கும் என மாவட்ட வன அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

கொடைக்கானல்: கால்ப் விளையாடிய முதல்வர்

image

கோடை கால ஓய்வுக்காக முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்துடன் நேற்று கொடைக்கானல் வந்தார்.  இந்நிலையில், இன்று மாலை வேளையில் பசுமை பள்ளத்தாக்கு அருகே உள்ள கால்ப் கிளப் மைதான பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டார். மேலும் தொடர்ந்து கால்ப் விளையாடினார்.

News April 30, 2024

திண்டுக்கல் மக்களவை தொகுதி வேட்பாளர் கோரிக்கை

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மலையடிவார கிரிவலப்பாதையில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு, திண்டுக்கல் மக்களவை தொகுதி எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக் இன்று (ஏப்ரல்-30) கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!