India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அறிவிப்பில் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தற்போது பள்ளிக் குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் பெற்றோர்கள் குடும்பத்துடன் உறவினர் வீடுகளுக்கு அல்லது சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பொழுது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுத்து விட்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளது.
திண்டுக்கல் தாமரைப்பாடி அருகே கேரளாவில் இருந்து திருச்சி நோக்கி சென்ற இன்னோவா கார் இன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தவர்களை நெடுஞ்சாலைத்துறை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் நடக்கும் முக்கிய நிகழ்வான வைகாசி விசாகம் பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழா வரும் மே.16 அன்று துவங்க உள்ளது. அன்று பெரிய நாயகி அம்மன் கோவிலில் காலை 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும். இதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மே 21, தேரோட்டம் மே 22 அன்று மாலை நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 ஆம் ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சோ்க்கை ‘க்யூட்’ தோ்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதேபோல ‘க்யூட்’ தோ்வு இல்லாமல், முதுநிலை பட்டயம், பி.வொக்., டி.வொக்., சான்றிதழ் படிப்புகளுக்கான நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது. சோ்க்கைக்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளம் மூலம் மே.31 வரை விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே வங்கமனத்து பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் மகன் விக்னேஷ்(22) நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாணார்பட்டி காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேற்படி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” பெற தகுதியுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இணையதளம் மூலம் மே.15ஆம் தேதி மாலை 4.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இணையதளம் www.sdat.tn.gov.in-ல் பார்த்து அறிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 7401703504 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி காந்தி மார்கெட்டுக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான சரக்கு லாரிகள் காய்கனிகளை ஏற்றுக் கொண்டு வெளியூர்களில் இருந்து வருகிறது. அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் இந்த வாகனங்களில் முறையாக தார்பாய் போட்டு கட்டாமலும் , கயிறு கொண்டு கட்டாமலும் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனத்தில் இருக்கும் மூட்டைகள் கீழே விழுந்தால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதியில் 5 சென்டி மீட்டர் மழைப்பொழிவு பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மழைப்பொழிவு அப்பகுதி மக்களுக்கு, வெயில் தாக்கத்திலிருந்து சற்று ஆறுதல் அளித்தது.
தேசிய விடுமுறை தினமான மே.1 இல் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். அதன்படி நேற்று தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம் ) மலர் கொடி தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் நேற்று ஆய்வு நடத்தினர். அதில் 50 நிறுவனங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி அணையர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மே.02) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.