Dindigul

News May 4, 2024

குடி போதையில் தவறி விழுந்து ஒருவர் பலி

image

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள உண்டார் பட்டியலை சேர்ந்தவர் வேல்முருகன் (45). இவர் மது போதையில் அப்பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து தவறி விழுந்து பலியாகினார். இதுகுறித்து தகவல் அறிந்த
தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 4, 2024

திண்டுக்கல் அருகே மின்வேலியில் சிக்கி யானை பலி

image

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வன சரகத்துக்குட்பட்ட தோனி மலை பகுதியில் இன்று (04.05.2024) தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலியானது. இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தனியார் தோட்டத்தின் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறனர்.

News May 4, 2024

திண்டுக்கல்: சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் கைது!

image

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பகுதியில், 4 வயது சிறுமியிடம் விருவீடு பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து(35) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். புகாரின் பேரில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 4, 2024

திண்டுக்கல்லில் நீட் தேர்வு எழுதும் 3,400 போ்!

image

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தோ்வு நாடு முழுவதும் வருகிற 5ம் தேதி நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் என்பிஆா் கல்விக் குழுமத்தில் 3 மையங்கள், பிஎஸ்என்ஏ கல்லூரி, பிரசித்தி வித்யோதயா பள்ளி, அனுகிரகா பள்ளி ஆகிய 6 மையங்களில் ‘நீட்’ தோ்வு நடைபெறுகிறது. இந்த மையங்களில் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சோ்ந்த 3,400 மாணவா்கள் தோ்வு எழுதுகின்றனா்.

News May 4, 2024

வெயிலால் பாதிக்கப்பட்டோருக்கு தனி வார்டு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து வெயிலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவு அருகில் 10 படுக்கைகளுடன் தனி வார்டு, குழந்தைகளுக்கு குழந்தைகள் வார்டில் 5 படுக்கை, மருத்துவமனை வளாகத்தில் 3 இடங்களில் ஓ.ஆர்.எஸ்.கரைசல் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News May 4, 2024

திண்டுக்கல்: சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு செல்ல 3 நாட்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மன்னுவனூர் , பூம்பாறை பகுதிகளில் பற்றி எரிந்த காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் மேல்மலை கிராமங்களுக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது. காட்டுத் தீ பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 3, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் மழை

image

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இரவு 10 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 3, 2024

திண்டுக்கல்லில் ஆட்டோ திருடன் கைது

image

திண்டுக்கல்லில் கடந்த 29 ஆம் தேதி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை காணவில்லை என திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ஏ.எஸ்.பி.சிபின் அவர்கள் தலைமையில் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் ஆய்வு செய்து சந்தானம் என்ற ஆட்டோ திருடனை இன்று காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.

News May 3, 2024

திண்டுக்கல் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

image

திண்டுக்கல் மலை அடிவாரம் பகுதியில அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் இன்று அம்மனுக்கு சித்திரை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

News May 3, 2024

திண்டுக்கல்: மாணவிகளுக்கு தேனீ வளர்ப்புப்‌ பயிற்சி

image

தோப்புப்பட்டியில் உள்ள தேனீ வளர்ப்புப் பண்ணையில் செம்பட்டி ஆர்.வி.எஸ் தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு தேனீ இனங்களை கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் அயல் மகரந்த சேர்க்கை, தேனை பிரித்தெடுத்தல், நோய் நிர்வாகம் பற்றியும் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதால் வரும் பாதிப்புக்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

error: Content is protected !!