India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் உள்ள ஜி.ஆர். பேட்டை வளாகத்தில் இன்று மே மாதம் 5-ஆம் தினத்தை முன்னிட்டு விசிக வணிகர் அணி ஒருங்கிணைக்கும் வணிகர் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள வணிகர்கள் மற்றும் விசிக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் பிற்பகல் தொடங்கிய இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவடைந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்ற நீட் நுழைவு தேர்வுக்கு 3,404 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று 6 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 3276 எழுதினர். 128 தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், “தடை செய்யப்பட்ட தலைக்குத்து அருவி, புல்லாவெளி குளிக்க, போட்டோ எடுக்க கூடாது. மாவட்டத்தில் உள்ள வனச்சரக பகுதியில் மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. உடைந்த பாட்டில்கள், மதுபானம் அருந்துவது பாேன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இ பாஸ் நடைமுறையால் கொடைக்கனாலுக்கு பேருந்தில் செல்ல மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால் திண்டுக்கல் ரயில் நிலையங்களில் இன்று (5.5.2024)முதல் கொடைக்கானலுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிகாலை 4 – 5.15 மற்றும் காலை 6 – 7.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படுகின்றன. இதற்கு 95 ரூபாய் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ரயில் நிலையங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ரயில் நிலையத்தில் பாதுகாப்பிற்காக 33 கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பிற்காக கூடுதலாக கேமராக்கள் பொருத்த தெற்கு ரயில்வே உத்தரவிட்டது. அதன்படி இன்று (5.5.2024) முதல் கூடுதலாக 117 கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
திண்டுக்கல் – கொடைக்கானல் சாலையில் இன்று தருமத்துப்பட்டியில் இருந்து திண்டுக்கல் வந்த தனியார் பேருந்தும், மதுரையில் இருந்து பழனி சென்ற காரும் விபத்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் கூறுகையில் இப்பகுதியில் அதிக வாகனங்கள் செல்லும் நிலையில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக தெரிவித்தனர்.
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட மழை எப்போது பெய்யும் என மக்கள் காத்திருக்கிறார்கள். அதன்படி திண்ருக்கல், கொடக்கானல் பகுதியில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் கோடை கால பயிற்சி முகாம் ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளியில் நாளை மறுதினம் (மே.7) முதல் மே 22 வரை நடைபெறுகிறது.
இதில் 21 வயதிற்குட்பட்டோர் ‘ஸ்டைகர் ‘ உடன் வந்து பங்கேற்கலாம். பயிற்சியின் இறுதியில் ஒற்றையர் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். விபரங்களுக்கு 97860 61985, 78457 89569 தொடர்பு கொள்ளலாம் என செயலாளர் ஆல்வின் செல்வகுமார் கேட்டுள்ளார்.
திண்டுக்கல் திருச்சிரோடு கல்லறை தோட்டம் அருகே நேற்று இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி- பொள்ளாச்சி பைபாஸ் சாலையில் உள்ள கடைகள் மற்றும் நகரில் பல கடைகளில் குட்கா பொருள், புகையிலை, ஹாண்ட்ஸ் புகையிலை போன்றவற்றை மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனர். ஒரு சில கடைகளில் குட்கா பொருள்களை பேப்பரில் மறைத்து கொடுத்து விற்பனை செய்கிறார்கள். மேலும், 20 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 50- ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.